Theme Check

பீகாரில் தடுப்பூசி மருந்து இல்லாமல் வெறும் ஊசியை செலுத்திய செவிலியர்!! வைரலாகும் வீடியோ !!

பீகாரில் தடுப்பூசி மருந்து இல்லாமல் வெறும் ஊசியை செலுத்திய செவிலியர்!! வைரலாகும் வீடியோ !!

பீகாரில் தடுப்பூசி மருந்து இல்லாமல் வெறும் ஊசியை செலுத்திய செவிலியர்!! வைரலாகும் வீடியோ !!
X

நாடு முழுவதும் கொரோனா 2-வது அலை தீவரமாக பரவி வருகிறது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தடுப்பூசி ஒன்றே தீர்வு என கருதப்படும் நிலையில், கடந்த ஜனவரி முதல் அடுத்தடுத்தக் கட்டமாக வயது வாரியாக தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

அதனபடி இந்தியாவில் கோவேக்சின், கோவிஷீல்டு என்ற இரண்டு தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. அதைத் தவிர்த்து ரஷ்யாவின் ஸ்புட்னிவி தடுப்பூசியும் பயன்படுத்தப்பட்டுவருகிறது.

இந்த நிலையில், பீகாரில் சப்ரா என்ற பகுதியில் ஒரு அதிர்ச்சியளிக்கும் சம்பவம் நடைபெற்றது. பீகாரில் இளைஞர் ஒருவருக்கு தடுப்பு மருந்தை செலுத்தாமல் வெறும் ஊசியை மட்டும் செவிலியர் செலுத்தியுள்ளார். இந்த விவகாரம் பீகாரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மருந்து ஏற்றாமல் ஊசியை மட்டும் செவிலியர் போடும் வீடியோ இணையத்தில் வைரலானது.

அதனையடுத்து, தவறிழைத்த செவிலியர் கொரோனா தடுப்பூசி போடும் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட இளைஞர் கூறிகையில், “நான் தடுப்பூசி போடும்போது என்னுடைய நண்பன் அதனை வீடியோவாக எடுத்தான். தடுப்பூசி போடும் நான் செய்யும் பாவனைகளைப் பதிவு செய்வதாக விளையாட்டாக அந்த வீடியோ எடுக்கப்பட்டது.

வீட்டுக்குச் சென்ற பிறகு வீடியோ மீண்டும் பார்க்கும்போதுதான் கவரிலிருந்து ஊசியை எடுக்கும் செவிலியர் நேரடியாக என்னுடைய கையில் போட்டது தெரியவந்தது.” எனக் கூறினார்.

முன்னதாக, பீகாரில் ஒரு பெண்ணுக்கு ஐந்து நிமிட இடைவெளியில் கோவிஷீல்டு தடுப்பூசியும், கோவேக்சின் தடுப்பூசியும் அடுத்தடுத்து செலுத்தப்பட்டது. இந்த விவகாரமும் தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Tags:
Next Story
Share it