Theme Check

கொரோனா தடுப்பூசியால் மீண்டும் கண் பார்வை பெற்ற மூதாட்டி..!

கொரோனா தடுப்பூசியால் மீண்டும் கண் பார்வை பெற்ற மூதாட்டி..!

கொரோனா தடுப்பூசியால் மீண்டும் கண் பார்வை பெற்ற மூதாட்டி..!
X

கொரோனா பரவலை கட்டுப்படுத்த அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளும்படி அரசு அறிவுறுத்தி வருகிறது. ஆனாலும், தடுப்பூசி பற்றி பல தவறான கருத்துகள் மக்களிடையே பரவி வருகின்றன. தவறான தகவல்களை நம்ப வேண்டாம் என ஒன்றிய, மாநில அரசுகள் சார்பில் வலியுறுத்தப்பட்டது.

இந்நிலையில், கொரோனா 2-வது அலை ஏற்படுத்திய பாதிப்பால் பலரும் தடுப்பூசி செலுத்த ஆர்வம் கொண்டுள்ளனர். சில பொதுவான பக்கவிளைவுகள் சிலருக்கு ஏற்பட்டிருந்தாலும், வேறு எந்தவித பாதிப்பையும் தடுப்பூசி ஏற்படுத்துவதில்லை என மருத்துவத்துறை கூறி வருகிறது.

இதனிடையே, பார்வை இழந்த மூதாட்டி ஒருவர் கொரோனா தடுப்பூசி போட்ட பிறகு பார்வையை பெற்றுள்ள அதிசயம் நிகழ்ந்துள்ளது. மராட்டியத்தைச் சேர்ந்த 70 வயதான மூதாட்டி கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு கண்புரை ஏற்பட்டு இரு கண்களின் பார்வைத் திறனை இழந்துள்ளார்.

இந்நிலையில், கொரோனா தொற்றுக்கு எதிரான கோவிஷீல்டு தடுப்பூசி போட்டுக்கொண்ட அவர், தற்போது கண் பார்வை ஓரளவு மீண்டும் கிடைத்துள்ளதாக கூறியுள்ளது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

Tags:
Next Story
Share it