Theme Check

ரேஷன் கடைக்கு சென்ற மூதாட்டி.. பின் தொடர்ந்த உறவினர்.. வழியில் நடந்த விபரீதம்..!

ரேஷன் கடைக்கு சென்ற மூதாட்டி.. பின் தொடர்ந்த உறவினர்.. வழியில் நடந்த விபரீதம்..!

ரேஷன் கடைக்கு சென்ற மூதாட்டி.. பின் தொடர்ந்த உறவினர்.. வழியில் நடந்த விபரீதம்..!
X

பொங்கல் பரிசு தொகுப்பு வாங்குவதற்காக ரேஷன் கடைக்கு சென்ற மூதாட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தென்காசி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டம் செங்கோட்டை தாலுகாவில் உள்ள கேசவபுரம் நாராயணசாமி கோவில் தெருவைச் சேர்ந்தவர் பாப்பம்மாள். இவருக்கும், இவரது உறவினரான முருகன் என்பவருக்கும் நீண்ட நாட்களாக இடப்பிரச்னை இருந்து வந்துள்ளது.
ரேஷன் கடைக்கு சென்ற மூதாட்டி வெட்டி படுகொலை...தென்காசியில் பரபரப்பு
இந்நிலையில் நேற்று, இடப்பிரச்னை காரணமாக அவர்களுக்குள் வாக்குவாதம் முற்றி உள்ளது. இந்தநிலையில், பாப்பம்மாள் பொங்கல் பரிசு தொகுப்பு வாங்குவதற்காக அருகே உள்ள ரேஷன் கடைக்குச் சென்றுள்ளார்.

அப்போது அவரை பின் தொடர்ந்து சென்ற முருகன், கோடாரியால் பாப்பம்மாளை வெட்டி படுகொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் முருகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
Share it