Theme Check

மனைவியின் பிரிவை தாங்காமல் சிதையில் குதித்து உயிர் விட்ட முதியவர் !!

மனைவியின் பிரிவை தாங்காமல் சிதையில் குதித்து உயிர் விட்ட முதியவர் !!

மனைவியின் பிரிவை தாங்காமல் சிதையில் குதித்து உயிர் விட்ட முதியவர் !!
X

ஒடிசா மாநிலம் காலஹன்டி மாவட்டம் சியால் ஜோடி கிராமத்தில் நிலமணி சாபர் (65), ரெய்பாரி(60) தம்பதி வசித்து வந்தனர். இவர்களுக்கு 4 மகன்கள் உள்ளன. இதில் வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவால் மனைவி ரெய்பாரி உயிரிழந்துவிட்டார். இதனால் அவரது கணவர் சாபர் பெரும் சோகத்தில் இருந்தார்.

death

இதனையடுத்து அவரது உடலுக்கு இறுதிச்சடங்கு நடத்தி சுடுகாட்டில் உறவினர்கள் அடக்கம் செய்தனர். பின்னர் அவர்களின் சம்பிரதாயப்படி நான்கு மகன்களும் உறவினர்களும் ஒரு குளத்தில் குளிக்கச் சென்றனர். ஆனால் நிலமணிசாபர் மனைவியின் உடல் எரிந்து கொண்டிருந்த அருகிலேயே இருந்தார். மனைவியின் பிரிவை அவரால் தாங்க முடியவில்லை எனவே திடீரென மனைவியின் சிறையில் குதித்தார் .

death

அவரது அலறல் சத்தம்கேட்டு உறவினர்கள் மற்றும் மகன்கள் அங்கு சென்று அவரை காப்பாற்ற போராடினர். எனினும் அவரது உடலிலும் தீப்பிடித்துக் கொண்டது. சற்று நேரத்தில் அவர் உடல் கருகி பலியானார். ஆனால் இச்சம்பவம் குறித்து அவருடைய குடும்பத்தினர் தரப்பில் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்படவில்லை. எனினும் இந்த சம்பவத்தை அறிநத காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

newstm.in

Tags:
Next Story
Share it