ஒரு முறை அல்ல, 48 முறை கொரோனாவுக்கு குட்பை சொன்ன முதியவர்..!
ஒரு முறை அல்ல, 48 முறை கொரோனாவுக்கு குட்பை சொன்ன முதியவர்..!

பிரிட்டனில் தற்போது கொரோனா வைரஸின் இரண்டாவது அலை படிப்படியாகக் குறைந்து வருகிறது. இதையடுத்து வரும் ஜூலை மாதம், பிரிட்டனில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு முழுவதுமாக நீக்க போரிஸ் ஜான்சன் அரசு முடிவெடுத்துள்ளது.
இந்நிலையில், பிரிட்டனில் உள்ள ஓர் மூத்த குடிமகன் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறார். இதற்கு முக்கிய காரணம், இவரது உடலில் அதிக நாட்கள் கொரோனா வைரஸ் தங்கியிருந்ததுதான்.
டேவ் ஸ்மித் (72) என்கிற வாகன பயிற்சியாளரான இவர், இதுகுறித்து கூறினார். கடந்த 10 மாதங்களில் 43 முறை இவரது உடலில் கொரோனா பாசிட்டிவ் அறிகுறி தென்பட்டதாகவும், ஏழு முறை இவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார்.
அத்துடன், தான் இறக்கப் போகிறோம் என்ற நினைப்பில், தனக்கு சவப்பெட்டியை தயார் செய்துவிட்டார். ஆனால், இவர் இறக்கவில்லை. பத்து மாதங்களாக இவரது உடலில் கொரோனா வைரஸ் மீண்டும் மீண்டும் தாக்கி வெளியேறியுள்ளது.
இதன்மூலமாக உலகிலேயே அதிகமுறை வைரஸால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து விடுபட்ட நபர் என்கிற பெயரை டேவ் ஸ்மித் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த செய்தி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
Tags:
Next Story

