Theme Check

ஒரே கிரிக்கெட் போட்டி! சச்சின், பதான், பத்ரி என அடுத்தடுத்து கொரோனா தொற்று! அதிர்ச்சியில் சக வீரர்கள்!

ஒரே கிரிக்கெட் போட்டி! சச்சின், பதான், பத்ரி என அடுத்தடுத்து கொரோனா தொற்று! அதிர்ச்சியில் சக வீரர்கள்!

ஒரே கிரிக்கெட் போட்டி! சச்சின், பதான், பத்ரி என அடுத்தடுத்து கொரோனா தொற்று! அதிர்ச்சியில் சக வீரர்கள்!
X

இந்தியாவில் மார்ச் மாதம் தொடக்கம் முதல் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், டெண்டுல்கரைத் தொடர்ந்து யூசுப் பதானுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து தன்னுடைய ட்விட்டரில், கொரோனா அறிகுறிகள் லேசாக இருந்ததால் பரிசோதனை மேற்கொண்டேன். அதில் கொரோனா தொற்று உறுதியானது.

இதனையடுத்து வீட்டிலேயே என்னை தனிமைப்படுத்திக்கொண்டேன். தேவையான மருத்துவ உதவிகள் எனக்கு வழங்கப்பட்டு வருகிறது. என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன், என யூசுப் பதான் பதிவிட்டுள்ளார்.

சச்சின், யூசுப் பதான், சேவாக், யுவராஜ் சிங் உள்ளிட்ட வீரர்கள் இடம்பெற்ற இந்தியா லெஜண்ட்ஸ் அணி சார்பில் அண்மையில் நடைபெற்ற ரோட் சேஃப்டி கிரிக்கெட் தொடரில் விளையாடியது. இதனையடுத்தே டெண்டுல்கர், யூசுப் பதானுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சக வீரர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.


இந்நிலையில், முன்னாள் இந்திய பேட்ஸ்மேன் எஸ். பத்ரிநாத், தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது என தெரிவித்து உள்ளார். இதுபற்றி தனது ட்விட்டர் பதிவில், தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் நான் மேற்கொண்டு உள்ளேன். தொடர்ந்து பரிசோதனையும் மேற்கொண்டு வந்தேன். இதில், சில லேசான அறிகுறிகளுடன் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதனால், அனைத்து வழிகாட்டி நெறிமுறைகளையும் பின்பற்றி வீட்டிலேயே என்னை தனிமைப்படுத்தி கொள்வேன். மருத்துவர் ஆலோசனைப்படி தேவையான நடவடிக்கைகளை எடுப்பேன். பாதுகாப்புடன் இருங்கள் என்று தெரிவித்து உள்ளார்.


ஒரேயொரு போட்டி தான்... ஆனால், கலந்து கொண்ட இந்திய வீரர்கள் அடுத்தடுத்து கொரோனா தொற்றுக்கு ஆளாகியிருப்பது சக வீரர்களையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. தற்போது போட்டியில் கலந்து கொண்ட சேவாக், யுவராஜ் போன்ற வீரர்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வீட்டிலேயே தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ளவிருக்கிறார்கள் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

Tags:
Next Story
Share it