மாஸ்க் இப்படி அணிந்தால் தான் பாதுகாப்பு! மருத்துவ நிபுணர்கள் விளக்கம்!

மாஸ்க் இப்படி அணிந்தால் தான் பாதுகாப்பு! மருத்துவ நிபுணர்கள் விளக்கம்!

மாஸ்க் இப்படி அணிந்தால் தான் பாதுகாப்பு! மருத்துவ நிபுணர்கள் விளக்கம்!
X

உலகம் முழுவதும் கொரோனா 2வது அலை பரவி வருகிறது. இந்தியாவிலும் சில நாட்களாக பரவல் அதிகரித்து வருவதாக சுகாதாரத்துறை பாதுகாப்புடன் இருக்க எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன் படி முகக்கவசம் அணிதில் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாகி விட்டது. இந்நிலையில், அதை எப்படி சரியாக அணிந்து கொள்வது என்பது குறித்த விரிவான ஆலோசனை மருத்துவ நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

கழுத்தைச் சுற்றி கர்சீப் போடுவது போல், முகத்திலிருந்து கீழே இறக்குவதும், அப்படியே அதை இழுத்து மேலே போடுவதுமாக தான் பெரும்பாலும் அனைவரும் செய்கிறார்கள். இப்படி முகக்கவசம் அணிவதால் எந்தப் பலனும் இல்லை. கைகளில் ஏதாவது தொற்று இருந்தால் அதை நேரடியாக மூக்குகிற்கு அருகிலேயே கொண்டு சென்று கொரோனாவை உடலுக்குள் அனுப்பும் பணியை அது ஒன்றே செய்து விடும்.

முகக்கவசம் அணிவதற்கும், அதை கழற்றுவதற்கும் பாதுகாப்பான வழிகளை கடைப்பிடிக்க வேண்டும். மற்றவர்களுடன் பேசும் போது முகக்கவசம் அணிந்திருப்பது தான் மிக மிக முக்கியமானதும் அவசியமானதும் கூட. அருகில் இருப்பவர்களுடன் பேசும் போது தான், வாயிலிருந்து வெளிப்படும் காற்றுடன் தொற்று கிருமிகள் மற்றவர்களுக்கு பரவும் வாய்ப்புகள் அதிகம்.

பேசும் போது கீழே இறக்கிவிட்டுக் கொள்வதும், பின்னர் மேலே இழுத்து விடுவதுமாக இருந்தால், அது சரியான முறை ஆகாது. பேசும் போது இறக்கி விட்டு பேசுவதாலும் நமக்கு மட்டுமல்ல நம்மிடமிருந்து மற்றவர்களுக்கு பரவி விடலாம் என்ற கவனத்துடன் செயல்பட வேண்டும். முகக்கவசத்தை தொடர்ந்து 6 மணி நேரத்திற்கு மேல் அணியக் கூடாது. கிளினிக்கல் முகக்கவசங்களை டிஸ்போஸ் செய்யும் போது ஏதாவதுஒரு தாளில் சுற்றி பேக் செய்து தான் குப்பை தொட்டியில் போட வேண்டும். இல்லையெனில் அதன் அருகில் இருப்பவர்களுக்கு மட்டுமல்ல அதில் போய் அமரும் ஈ, கொசுக்கள் மூலமாக அந்த சமூகத்தில் உள்ளவர்களுக்கே பரவும் வாய்ப்பு அதிகம் இதை நினைவில் கொண்டு சரியான முறையில் பாதுகாப்பாக முகக்கவசம் அணிவோம். கொரோனாவிலிருந்து நம்மையும், சுற்றியுள்ளவர்களையும் காப்போம்.

Tags:
Next Story
Share it