“திருடப் போய் வேட்டி போனதுதான் மிச்சம்” : கண்ணீர் வடித்த திருடன்!!
“திருடப் போய் வேட்டி போனதுதான் மிச்சம்” : கண்ணீர் வடித்த திருடன்!!

திருவள்ளூர் அருகே வீட்டில் கொள்ளை போனதாக நாடகமாடிய நபரை காவல்துறையினர் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
கடம்பத்தூர் ஒன்றியம் கீழ் நல்லாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜேஷ் என்பவர், தனது வீட்டில் புகுந்த மர்ம நபர்கள் இருவர் ஐந்து லட்சம் ரூபாயை பட்டப்பகலில் கொள்ளை அடித்து சென்றதாக சிசிடிவி கேமரா பதிவை வைத்து புகார் அளித்தார்.
மேலும் அப்போது பிடிபட்ட நபர் ஒருவரையும் உடன் வந்த மற்றொருவர் அணிந்திருந்த வேட்டியுடன் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

போலீஸார் பிடிபட்ட நபரிடம் விசாரணை செய்ததில் காவல் ஆய்வாளரின் காலில் விழுந்த நபர் வீட்டில் ஒரு ரூபாய் கூட பணம் இல்லை என்றும் திருட வந்த இடத்தில் தனது வேட்டியை பறி கொடுத்தது தான் மிச்சம் என்று வேதனையுடன் கண்ணீர் விட்டு அழுதுள்ளார்.
சென்னையை சேர்ந்த கிறிஸ்டோபர் திருநின்றவூர் பகுதியை சேர்ந்த பார்த்திபன் ஆகிய இருவரை பிடித்து திருட முயற்சித்தாக வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். திருடு போகாமலேயே 5 லட்சம் ரூபாய் பணம் கொள்ளை போனதாக கூறிய நபர் ராஜேசை எச்சரித்து மணவாளநகர் காவல்துறையினர் அனுப்பி வைத்தனர்.
newstm.in

