ஒமைக்ரானில் இருந்து தப்பிக்க ஒரே வழி.. 4ஆவது டோஸ் தடுப்பூசி செலுத்தும் முதல் நாடு !

ஒமைக்ரானில் இருந்து தப்பிக்க ஒரே வழி.. 4ஆவது டோஸ் தடுப்பூசி செலுத்தும் முதல் நாடு !

ஒமைக்ரானில் இருந்து தப்பிக்க ஒரே வழி.. 4ஆவது டோஸ் தடுப்பூசி செலுத்தும் முதல் நாடு !
X

ஒமைக்ரான் பாதிப்பை கட்டுப்படுத்த உலக நாடுகள் போராடி வருகிறது. ஏற்கனவே கொரோனா வைரஸ் தடுப்பூசி 2 டோஸ்களாக செலுத்தப்பட்டு வருகிறது. தற்போது உருமாறிய கொரோனா பரவுவதால் பூஸ்டர் தடுப்பூசியை (3ஆவது டோஸ்) பல்வேறு நாடுகள் மக்களுக்கு செலுத்தி வருகின்றன.

இந்த நிலையில் இஸ்ரேல் முதல் நாடாக கொரோனா தடுப்பூசியின் 4ஆவது டோசை செலுத்த திட்டமிட்டுள்ளது. 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு பைசர்- பயோன்டெக் தடுப்பூசியின் 4ஆவது டோசை செலுத்தலாம் என வல்லுநர் குழு பரிந்துரை செய்துள்ளது. இந்த பரிந்துரைக்கு சுகாதாரத்துறை ஒப்புதல் அளித்ததும் விரைவில் 4ஆவது டோஸ் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கும்.

vaccine

இந்த நடவடிக்கையை பிரதமர் நஃப்தலி பென்னட் வரவேற்றுள்ளார். இது, ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பினால் ஏற்படும் அடுத்த அலையை சமாளிக்க உதவும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

புதிய வகை உருமாறிய கொரோனா வைரசான ஒமைக்ரான் வைரசால் பல நாடுகளில் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இஸ்ரேல் நாட்டில் 341 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

vaccine

முன்னதாக, 3ஆவது தவணை கரோனா தடுப்பூசி செலுத்தி 4 மாதங்கள் ஆனவா்களுக்கு 4ஆவது தவணை செலுத்தலாம் என்று இஸ்ரேல் தலைமை மருத்துவ நிபுணா்கள் குழு பரிந்துரைத்தது. எனினும், இதற்கு சுகாதாரத் துறையின் தலைமை இயக்குநா் அனுமதியைப் பெற வேண்டியுள்ளது. இன்னும் சில நாள்களில் இதற்கான அனுமதி கிடைக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. அந்த வகையில் அனுமதி கிடைத்தால் 4ஆவது டோஸ் செலுத்தும் முதல் நாடாக இஸ்ரேல் கருதப்படும்.

newstm.in

Tags:
Next Story
Share it