எடப்பாடி முன்னிலையிலேயே சசிகலாவுக்கு அழைப்பு விடுத்த ஓ.பி.எஸ்.. அதிமுகவில் மீண்டும் புகைச்சல்
எடப்பாடி முன்னிலையிலேயே சசிகலாவுக்கு அழைப்பு விடுத்த ஓ.பி.எஸ்.. அதிமுகவில் மீண்டும் புகைச்சல்

அதனைத் தொடர்ந்து அதிமுகவின் உட்கட்சி தேர்தல் நடத்தப்பட்டு ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவியில் தக்கவைத்துக் கொண்டுள்ளனர். இந்நிலையில் அதிமுக தலைமையின் மீது அதிருப்தியில் உள்ளவர்கள் சசிகலாவை தொடர்ந்து சந்தித்து வருகின்றனர். சசிகலா ஆதரவாளர்கள் அவரை கட்சியில் சேர்ந்தால் மட்டுமே அதிமுகவை காப்பாற்ற முடியும் எனக் கூறி வருகின்றனர்.
இதனால் அதிமுக கட்சிக்குள் எப்போதும் இருவிதமான புயல் சுழன்றுகொண்டே தான் இருக்கிறது. இந்த நிலையில், அதிமுக நிகழ்ச்சியில் ஓ.பன்னீர்செல்வம் கூறிய கதை, தற்போது அதிமுகவில் சசிகலாவுக்கான கதவு திறக்கப்பட்டுவிட்டதோ என்ற என்னம் தோன்றுகிறது.

சென்னை சேத்துப்பட்டில் அதிமுக சார்பில் இன்று கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது. இதில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் இதில் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் பேசிய ஓ.பன்னீர் செல்வம், இயேசு பிரான் கதையை கூறி, 'பாவத்தை சுமந்தவர்களை மனம் திருத்த வந்துள்ளேன்' என்ற இயேசுவின் வரிகளை சுட்டிக்காட்டி குட்டிக்கதை கூறினார். தொடர்ந்து பேசிய பன்னீர்செல்வம், 'தவறு செய்பவர்கள் மனம் திருந்தி வந்தால் அவர்களை ஏற்பதுதான் தலைமைக்கு அழகு,' எனத் தெரிவித்தார்.
நீண்ட காலமாக சசிகலாவை அதிமுகவில் சேர்க்கப்போவதாக செய்திகள் வெளிவரும் நிலையில், பன்னீர்செல்வத்தின் இந்த பேச்சு கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஓ.பன்னீர்செல்வத்தின் இந்த கருத்தால், எடப்பாடி பழனிசாமி தரப்பினர் கடும் அதிருப்தி அடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
newstm.in

