திக் திக் நிமிஷம்... ரயிலில் சிக்கிய பயணியை அதிரடியாய் மீட்ட போலீசார்! வைரலாகும் வீடியோ!
திக் திக் நிமிஷம்... ரயிலில் சிக்கிய பயணியை அதிரடியாய் மீட்ட போலீசார்! வைரலாகும் வீடியோ!

ஒடும் ரயிலில் ஏற முயன்றபோது இழுத்துச்செல்லப்பட்ட பயணியை துரிதமாக மீட்ட ரயில்வே போலீசாருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
கோவை ரயில் நிலையத்தில் ஒடும் வண்டியில் ஏற முயற்சித்த பயணி தவறி கீழ விழுந்தார், அவரை கண்ணிமைக்கும் நேரத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த ரயில்வே போலீஸ் மீட்டார்.
இச்சம்பவம் குறித்து வீடியோவை ரயில்வே போலீசார் வெளியிட்டனர். கோவை ரயில் நிலையத்திற்கு மாலை 4.30 மணியளவில் திருவனந்தபுரத்தில் இருந்து ஹைதராபாத் செல்லும் வண்டி 3வது நடைபாதையில் வந்துள்ளது. அப்போது ஒடும் ரயிலில் பயணி ஏற முயற்சித்தபோது கால்தடுமாறி கீழே விழுந்தார்,

ஆனால் அந்நபர் கிழே விழுந்தாலும் வண்டியின் கம்பியை இறுக்கமாக பிடித்துக்கொண்டார். இதனால் அவர் கிழே விழாமல் சிறிது தூரம் இழுத்து செல்லப்பட்டு போராடினார். இதனை கண்ட அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ரயில்வே போலீசார் சிரிஜித் துரிதமாக செயல்பட்டு அடுத்த நில விநாடிகளில் அவரது உயிரை காப்பாற்றினார்.
மேலும் இச்சம்பவம் குறித்து அறிந்த ரயில்வே உயர் அதிகாரிகள், பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட காவலரை வெகுவாக பாராட்டினர். இது தொடர்பான வீடியோவும் வைரலாகும் நிலையில் சமூக வலைதளம் மூலமாகவும் அவருக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
#கோவை இரயில் நிலையத்தில் ஒடும் வண்டியில் ஏற முயற்சித்த பயணி தவறி கீழே விழுந்தார், வண்டியின் சக்கரத்தில் சிக்காமல் பாதுகாப்பு பணியில் இருந்து இரயில்வே போலிசார் பாதுகாப்பாக மீட்டார்...
— கார்த்திக் சதிஸ்குமார் (@karthisathees) February 28, 2021
@RailMinIndia @gurusamymathi @Srinietv2 #coimbatore pic.twitter.com/JYmSRrKZKj
newstm.in

