Theme Check

முப்படைகளின் முதல் தளபதி பிபின் ராவத் கடந்து வந்த பாதை..!

முப்படைகளின் முதல் தளபதி பிபின் ராவத் கடந்து வந்த பாதை..!

முப்படைகளின் முதல் தளபதி பிபின் ராவத் கடந்து வந்த பாதை..!
X

உத்தர்கண்ட் மாநிலத்தை சேர்ந்த பிபின் ராவத்தின் குடும்பம், பல தலைமுறைகளாக தொடர்ந்து ராணுவத்தில் பணியாற்றுகிறது. ஜெனரல் பிபின் ராவத், இமாச்சலப் பிரதேச மாநிலம் சிம்லாவில் உள்ள செயின்ட் எட்வர்ட் பள்ளியில் ஆரம்ப கால படிப்பை முடித்த பிபின் ராவத், ராணுவத்தின் மீதான ஆர்வத்தால் கடக்வஸ்லாவில் உள்ள தேசிய பாதுகாப்பு அகாடமியில் சேர்ந்து ராணுவ பயிற்சி பெற்றார்.

General Bipin Rawat 62nd Birthday: Interesting Facts About First Chief of  Defence Staff of The Country | 🇮🇳 LatestLY
தமிழகத்தின் வெலிங்டனில் உள்ள பாதுகாப்பு சேவை உயரதிகாரிகளுக்கான பயிற்சிக் கல்லூரியில் பயின்று பட்டம் பெற்ற பின் அமெரிக்காவுக்கு சென்று மேல் படிப்பை முடித்தார். இதன் பின்னர், 1978-ம் ஆண்டு இந்திய ராணுவத்தின் 11-வது கூர்கா ஆயுதப் படையில் சேர்ந்து பணியாற்றத் தொடங்கினார்.

வடகிழக்கு மாநில எல்லைப் பகுதிகள், காஷ்மீர் பள்ளத்தாக்குகள், இந்தியா - பாகிஸ்தான் மற்றும் இந்திய - சீன எல்லைப் பகுதி என பல்வேறு களங்களில் பணியாற்றி, தேர்ந்த அனுபவத்தை பெற்றார் பிபின் ராவத்.

காங்கோ நாட்டிற்கு சென்று சர்வதேச ராணுவத்தில் சில காலம் பணியாற்றிய பிபின் ராவத், அங்கு படைகளுக்கு தலைமை வகித்தார். படிப்படியாக இந்திய ராணுவத்தின் பல்வேறு பதவிகளை அலங்கரித்த பிபின் ராவத், கடந்த 2016 டிசம்பர் 31-ம் தேதி ராணுவ தளபதி பொறுப்புக்கு வந்தார்.

After Gen Bipin Rawat takes charge as CDS, PM Modi says institution  reflects hopes of 1.3 bn Indians | India News – India TV
இதையடுத்து, கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 30-ம் தேதி, இந்திய முப்படைகளின் முதல் தலைமை தளபதியாக நியமிக்கப்பட்டார். அவர், 2020-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் தேதி அன்று பொறுப்பேற்றார்.

Next Story
Share it