Theme Check

கொடூரத்தின் உச்சம்..!! பிறந்து 40 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையை பெயிண்ட் பக்கெட் நீரில் மூழ்கடித்து கொலை..!!

கொடூரத்தின் உச்சம்..!! பிறந்து 40 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையை பெயிண்ட் பக்கெட் நீரில் மூழ்கடித்து கொலை..!!

கொடூரத்தின் உச்சம்..!! பிறந்து 40 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையை பெயிண்ட் பக்கெட் நீரில் மூழ்கடித்து கொலை..!!
X

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த தோல்ஷாப் பகுதியை சேர்ந்தவர் மனோ (22). சென்னை திருநின்றவூரில் பூக்கடையில் வேலை செய்து வரும் இவருக்கும் அம்சநந்தினி (20) என்பவருக்கும் திருமணம் முடிந்து 3 ஆண்டுகள் முடிந்த நிலையில், யுவன் என்ற ஆண் குழந்தை கடந்த 40 நாட்கள் முன் பிறந்துள்ளது.

40-day-old-baby-dies-after-drowning-in-paint-bucket

இந்த நிலையில், வேலைக்கு சென்றுவிட்டு வீடுதிரும்பிய மனோவும் அவரது மனைவியும் நேற்று இரவு உறங்கிக்கொண்டிருந்தனர். அப்போது 2 மணியளவில் அம்சநந்தினி அருகே இருந்த குழந்தை காணாமல் போனதாக கூறப்படுகிறது. குழந்தையை காணவில்லை என்று அம்சநந்தினி அலறி அழுத நிலையில் வீட்டில் அனைத்து இடங்களிலும் தேடிய நிலையில் பின்னர் வீட்டின் குளியலறையில் 20 லிட்டர் பெயிண்ட் பக்கெட்டில் உள்ள நீரில் குழந்தை தலைகீழாக இருப்பது தெரியவந்துள்ளது.

இதையடுத்து அரக்கோணம் நகர காவல் நிலையத்திற்கு தகவல் அளித்ததன் பேரில் குழந்தையை மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனை செய்ய கொண்டு செல்லப்பட்டது. இதுகுறித்து அரக்கோணம் நகர காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

baby

முதற்கட்ட விசாரணையில், தந்தையான மனோ குழந்தையை கொன்றது தெரியவந்துள்ளது. இரவு குடிபோதையில் மனைவியுடன் கணவன் படுக்கச் சென்றதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். குடிபோதையில் இருந்த ஆத்திரத்தில் பிறந்து 40 நாட்கள் ஆன பச்சிளம் குழந்தையை எடுத்துச்சென்று நீர்நிறைந்த பக்கெட்டியில் குழந்தையை அமுக்கி மனோ கொலை செய்ததாக அரக்கோணம் டிஎஸ்பி புகழேந்தி கணேஷ் தெரிவித்துள்ளார்.

40 நாட்களே ஆன பிறந்த குழந்தை பெயிண்ட் பக்கெட் நீரில் இருந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story
Share it