தங்கம் வாங்க சரியான நேரம்.. இன்று சவரனுக்கு அதிரடியாக 616 ரூபாய் குறைந்தது!
தங்கம் வாங்க சரியான நேரம்.. இன்று சவரனுக்கு அதிரடியாக 616 ரூபாய் குறைந்தது!

கொரோனா ஊரடங்கு காரணமாக திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளும் குறைந்து விட்டன என்றாலும் கொரோனா பரவல் காரணமாக முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீதும், வெள்ளியின் மீதும் முதலீடு செய்கின்றனர். இதனால் சில்லறை விலையில் தங்கம் விலை ஒவ்வொரு நாளும் புது உச்சத்தை அடைகிறது.இனி தங்கம் வாங்குவது கனவில் மட்டுமே நிறைவேறும் என்று நடுத்தர மக்கள் கவலையில் இருந்த நிலையில் கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது.
தங்கத்தின் விலை இன்றைய நிலவரப்படி சவரனுக்கு 616 ரூபாய் குறைந்து ஒரு சவரன் தங்கம் ரூ.36,000 க்கு விற்பனையாகிறது. இன்று ஒரே நாளில் கிராமுக்கு ரூ.77 ஆக குறைந்து, ரூ.4,500 க்கு விற்பனை செய்யப்படுகின்றன.
ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று 76,400 ரூபாயாக இருந்த நிலையில் இன்று காலையில் வெள்ளியின் விலை கிலோவுக்கு 1,300 ரூபாய் குறைந்து ரூ.75,100-க்கு விற்பனை ஆனது. இந்நிலையில், மாலை நிலவரப்படி கிலோவுக்கு மேலும் ரூ. 700 குறைந்து 74,400 விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.74.40 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

