Theme Check

பியூட்டி பார்லர் பெண்ணிடம் சம்பவம் செய்தவர் அதிரடி கைது!!

பியூட்டி பார்லர் பெண்ணிடம் சம்பவம் செய்தவர் அதிரடி கைது!!

பியூட்டி பார்லர் பெண்ணிடம் சம்பவம் செய்தவர் அதிரடி கைது!!
X

சேலம் மாவட்டம் எடப்பாடியில் பியூட்டி பார்லர் நடித்தி வரும் பெண்ணை தங்க செயினை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

எடப்பாடி நகராட்சி ஜெயலலிதா வணிகவளாகத்தில் பியூட்டி பார்லர் நடத்திவருபவர் கவுண்டம்பட்டி பிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்த கஸ்தூரி (32). இவர் பியூட்டி பார்லரில் இருந்தபோது மர்ம நபர் ஒருவர் கடையில் புகுந்து மயக்க பொடியை முகத்தில் வீசி அப்பெண் அணிந்திருந்த செயினை பறிக்க முயன்றார்.

சுதாரித்து கொண்ட அந்த பெண் அந்த மர்ம நபரின் பிடியில் இருந்து தப்பி வெளியே ஓடிவந்து சத்தம்போட்டதால் அந்த நபர் அங்கிருந்து தப்பிச்சென்றார். இதனையடுத்து கஸ்தூரி கொடுத்த புகாரின்.பேரில் எடப்பாடி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.

theft 1

மேலும் வணிக வளாகத்தில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து தப்பி ஓடிய இளைஞரை தேடிவந்தனர். இந்நிலையில், எடப்பாடியில் இருந்து பூலாம்பட்டி செல்லும் வழியில் சந்தனமில் அருகே கண்காணிப்பு கேமராவை போலீஸார் ஆய்வு செய்தனர்.

அதில் உள்ள நபர் பியூட்டி பார்லரில் மயக்கமருந்து தெளித்த இளைஞர் போன்று இருப்பதை அறிந்த காவல்துறையினர் அவரை பிடித்து விசாரித்ததில் எடப்பாடி அடுத்த சந்தனமில் பகுதியைசேர்ந்த தங்கராசு (32) என்பது தெரியவந்தது.

தனியாக இருந்த பியூட்டி பார்லர் பெண்ணிடம் நகைபறிக்க முயன்றதை ஒப்புகொண்டு வாக்கு மூலம் கொடுத்ததை தொடர்ந்து எடப்பாடி காவல்துறையினர் அவரை கைதுசெய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பிவைத்தனர்.

newstm.in

Next Story
Share it