Theme Check

கள்ளக்காதலுக்கு இடையூறு.. குழந்தையை போலீசில் ஒப்படைத்த நபர்..!

கள்ளக்காதலுக்கு இடையூறு.. குழந்தையை போலீசில் ஒப்படைத்த நபர்..!

கள்ளக்காதலுக்கு இடையூறு.. குழந்தையை போலீசில் ஒப்படைத்த நபர்..!
X

கர்நாடக மாநிலம் மைசூரு மாவட்டம் லஷ்கர் மொகல்லா பகுதியை சேர்ந்தவர் ரகு (30). இவர், கடந்த 10-ம் தேதி லஷ்கர் மொகல்லா காவல் நிலையத்திற்கு ஆண் குழந்தை ஒன்றை கொண்டு சென்றார்.

அங்கு அவர், இந்தக் குழந்தையை ராய்ச்சூர் பஸ் நிலையத்தில் அவரது தாய் தன்னிடம் விட்டுச் சென்றதாகவும், அதன் பின்னர் அவரது தாய் வரவில்லை எனக் கூறி போலீசில் ஒப்படைத்தார்.

இதையடுத்து அந்தக் குழந்தையை காப்பகத்தில் சேர்க்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் போலீசாருக்கு ராய்ச்சூரில் ஒரு குழந்தை மாயமானதாக தகவல் கிடைத்தது. அந்த குழந்தையின் முகத்தோற்றம் லஷ்கர் மொகல்லாவில் காப்பகத்தில் உள்ள குழந்தையின் முக தோற்றத்துடன் ஒத்துப்போனது.

இதையடுத்து காணாமல் போனதாக தேடப்பட்ட குழந்தையின் தந்தையை அழைத்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது திடுக்கிடும் தகவல் வெளியானது.

அதாவது, குழந்தையை போலீசிடம் ஒப்படைத்த ரகுவுக்கும், குழந்தையின் தந்தை மனைவிக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இது தெரியவந்ததும் அவர் இருவரையும் கண்டித்துள்ளார்.

இதற்கிடையே, கள்ளக்காதலுக்கு இடையூறாக காதலியின் குழந்தை இருப்பதாக கருதி சம்பவத்தன்று ரகு குழந்தையை எடுத்து வந்து போலீசிடம் ஒப்படைத்தது தெரியவந்தது.

இதையடுத்து ரகு மற்றும் அவரது கள்ளக்காதலியை போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story
Share it