தலீபான்களுக்கே கம்பி நீட்டிய நபர்.. இணையதள பக்கங்கள் முடக்கத்தால் அதிர்ச்சி !!
தலீபான்களுக்கே கம்பி நீட்டிய நபர்.. இணையதள பக்கங்கள் முடக்கத்தால் அதிர்ச்சி !!

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப்படைகள் வெளியேறியதையடுத்து அங்கு தலீபான்கள் ஆட்சியை கைப்பற்றியது. ஒவ்வொரு நகரமாக பிடித்துவந்த தலிபான்கள் சில நாட்களில் தலைநகர் காபூலையும் தன்வசப்படுத்தினர். அந்த நிமிடத்தில் அதிபர் அஷரப் கனி ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறினார். பின்னர் தலிபான்கள் கீழ் வாழ விரும்பாத ஆப்கானிஸ்தான் மக்கள் தங்கள் சொந்த நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர்.

இதற்கிடையில், தலீபான் பயங்கரவாதிகள் தங்கள் கருத்துக்கள் மற்றும் செய்திகளை தங்களுக்கான பிரத்யோக இணையதளம் மூலம் உலக நாடுகளுக்கு தெரிவித்து வந்தனர். ஆங்கிலம், உருது, அரபு, பஷ்டோ, டரி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்த இணையதள பக்கம் உள்ளது.
இந்நிலையில், தலீபான் பயங்கரவாதிகளின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கங்கள் முடக்கப்பட்டுள்ளது. ஆங்கிலம், உருது, அரபு, பஷ்டோ, டரி உள்ளிட்ட மொழிகளில் உள்ள தலீபான்களின் இணையதள பக்கங்கள் திடீரென மாயமாகியுள்ளது.

முன்னதாக, தலீபான்கள் தொடர்பான பேஸ்புக், வாட்ஸ் அப் கணக்குகள் முடக்கப்பட்ட நிலையில் தற்போது தலீபான்களின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கங்கள் முடக்கப்பட்ட நிகழ்வு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருத்தப்படுகிறது. தலீபான்களின் இணையதள பக்கங்கள் யாரால் முடக்கப்பட்டது என்பது குறித்த தகவல் வெளியாகியவில்லை.
newstm.in

