Theme Check

என்னை தாங்கி நிற்கும் தூண்.. துரைமுருகனுக்கு முதல்வர் புகழாரம்..!

என்னை தாங்கி நிற்கும் தூண்.. துரைமுருகனுக்கு முதல்வர் புகழாரம்..!

என்னை தாங்கி நிற்கும் தூண்.. துரைமுருகனுக்கு முதல்வர் புகழாரம்..!
X

வேலூரில், ரூ.82.10 கோடி மதிப்பில் முடிவுற்ற திட்டப் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து, ரூ.32.9 கோடி மதிப்பில் 50 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

அத்துடன், பல்வேறு துறைகளின் சார்பில் நலத்திட்ட உதவிகளை முதல்வர் மு.க ஸ்டாலின் வழங்கினார். அதன் பின்னர் அவர் விழாவில் பேசியதாவது; “வேலூர் கோட்டையில் நடத்திய புரட்சி தான் சுதந்திர போருக்கு முதன்மையானது.

வேலூர் என்பது வீரம், விவேகம், விடுதலையின் அடையாளம். என்னை தாங்கி நிற்கும் தூண் துரைமுருகன். அமைச்சர் துரைமுருகனின் மாவட்டம் என்பதால் இங்கு வருவதில் கூடுதல் மகிழ்ச்சி. என்னை இளைஞராக பார்த்த அமைச்சர் துரைமுருகன் இன்று தலைவராக பார்க்கிறார்.

திராவிட மாடல் தமிழகத்திற்கு மட்டும் இன்றி நாட்டின் அனைத்து மாநிலங்களுக்கும் வழிகாட்டும் மாடல். காட்பாடியில் 300 ஏக்கரில் புதிதாக தொழிற்பேட்டை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ரூ.58 கோடியில் புதிய தடுப்பணைகள் கட்டும் பணி விரைவில் தொடங்கும்” என்று கூறினார்.

Next Story
Share it