மூடநம்பிக்கையின் உச்சம்.. உடல்நிலை பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நேர்ந்த கதி !
மூடநம்பிக்கையின் உச்சம்.. உடல்நிலை பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நேர்ந்த கதி !

கேரள மாநிலம் கண்ணூர் பகுதியில் அப்துல் சதார் என்பவர் மனைவி, மகள் என குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது மகளுக்கு கடந்த ஒருவாரமாக காய்ச்சல் இருந்துள்ளது. வீட்டிலேயே மருந்து, மாத்திரை கொடுத்தும் குணமாகவில்லை. பின்னர் காய்ச்சலுக்கு மருத்துவமனை அழைத்துச் செல்லாமல் குஞ்சிப்பள்ளியில் உள்ள மசூதியின் இமாம் உவைஸ்ஸிடம் சிறுமியை அழைத்துச் சென்றுள்ளார்.
அங்கு இமாம் உவைஸ்ஸி சிறுமிக்கு புனித நீர் என்ற பெயரில் தண்ணீரை தெளித்துள்ளார். மேலும் சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வேண்டாம், இரவுக்குள் சரியாகிவிடும் என தெரிவித்துள்ளார். இமாமின் பேச்சைக் கேட்டு மகளை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல் வீட்டியே வைத்திருந்த நிலையில், சிறுமிக்கு உடல்நிலை மோசமாகியுள்ளது.

இந்த விவகாரம் அக்கம் பக்கத்தினருக்கு இடையே தெரியவர, உறவினர்கள் குழந்தையை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுமதித்துள்ளனர். அப்போது குழந்தை ஏற்கனவே உயிரிழந்ததாக மருத்துவர்கள் அறிவித்துள்ளனர். இதனால் அவர்கள் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகினர். இதுதொடர்பாக அப்துல் சதாரின் சகோதரர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், உயிரிழந்த சிறுமியின் தந்தை மற்றும் இமாமை கைது செய்தனர். ஏற்கெனவே இதுபோல மருத்துவமனைக்கு கொண்டு செல்லாமல் தங்கள் குடும்பத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக அப்துல் சதாரின் சகோதரர் தெரிவித்திருக்கிறார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
newstm.in

