மைதானத்தின் பாதியில் இருந்து கோல் அடித்து சாதனை படைத்த வீரர்.. வியக்க வைக்கும் வீடியோ !
மைதானத்தின் பாதியில் இருந்து கோல் அடித்து சாதனை படைத்த வீரர்.. வியக்க வைக்கும் வீடியோ !

யூரோ கோப்பை கால்பந்து தொடரின் லீக் போட்டிகள் விறு விறுப்புடன் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நேற்று டி பிரிவில் செக் குடியரசு அணியும் ஸ்காட்லாந்து அணியும் பலப்பரிட்சை நடத்தியது. இதில் இரண்டு அணிகளும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இந்த நிலையில், ஆட்டத்தின் 42 வது நிமிடத்தில் செக் குடியரசு அணி வீரர் பேட்ரிக் சிக் ஒரு கோல் அடித்து தனது அணியின் கோல் கணக்கை துவங்கினார்.

இதையடுத்து ஸ்காட்லாந்து அணி தாக்குதல் ஆட்டத்தை தொடர்ந்தது. ஆட்டத்தின் 52 வது நிமிடத்தில் ஸ்காட்லாந்து அணி கோல்கீப்பர் மார்சல் பந்தை தனது அணி வீரரிடம் அடித்துவிட்டு கோல் பாக்ஸுக்கு வெளியே நின்றிருந்தார். அப்போது மைதானத்தில் பாதியில் பந்தை எடுத்த செக் குடியரசு வீரர் பேட்ரிக் சிக், ஸ்காட்லாந்து அணி கோல் கீர்ப்பர் கோல் கம்பத்தை விட்டு வெளியே இருப்பதைக் கண்டு பந்தை நேராக கோல் கம்பத்தை நோக்கி அடித்தார்.
இதை பார்த்த ஸ்காட்லாந்து கோல் கீப்பர் மார்சல் பந்தை தடுக்க ஓடினார். ஆனால், அவர் வருவதற்குள் பந்து உலக ரசிகர்கள் வியக்கும் வகையில் கிளாசிக் கோலானது. இதையடுத்து செக் குடியரசு அணி 2க்கு 0 என்ற கோல் கணக்கில் ஸ்காட்லாந்து அணியை வீழ்த்தியது. செக் குடியரசு வீரர் பேட்ரிக் சிக் அடித்த கோல்தான் இந்த தொடரில் நீண்ட தூரத்தில் இருந்து அடிக்கப்பட்ட கோல் என்ற சாதனையாக உள்ளது. தற்போது அவர் கோல் அடித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Patrik Schick’s PHENOMENAL long-range goal against Scotland — we’re going to be seeing this a LOT! 🇨🇿💪
— Ian Willoughby (@Ian_Willoughby) June 14, 2021
pic.twitter.com/viKaoP7DrD
newstm.in

