கடலில் பாய்ந்து தனி ஆளாக இளைஞர்களை காப்பாற்றிய காவலர்.. குவியும் பாராட்டு !!
கடலில் பாய்ந்து தனி ஆளாக இளைஞர்களை காப்பாற்றிய காவலர்.. குவியும் பாராட்டு !!

கடலில் குளித்தபோது ராட்ச அலையில் இழுத்து செல்லப்பட்ட இரண்டு இளைஞர்களை தனி ஆளாக போராடி உயிருடன் மீட்ட காவலருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
கிருஷ்ணகிரியை சேர்ந்தவர் விஷ்ணு (22), சபரிஷ் (24) ஆகியோர் தங்கள் நண்பர்களுடன் புதுச்சேரியில் நடைபெற்ற திருமணம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள் அனைவரும் புதுச்சேரி தலைமை செயலகம் எதிரே உள்ள கடற்கரையில் குளிக்க சென்றனர். அவர்கள் கடற்கரையில் நின்றவாறு குளித்துக்கொண்டிருந்தனர்.

அப்போது, கடலில் எழுந்த ராட்ச ஆலையில் அனைவரையும் உள்ளே இழுத்து. மற்றவர்கள் இதில் தப்பி கரைவந்த நிலையில், விஷ்னு, சபரிஷ் ஆகிய இருவரையும் இழுத்து சென்றுள்ளது. இதைக் கண்ட அவர்களது நண்பர்கள் சத்தம்போட்டுள்ளனர். இதனையடுத்து அங்கு ரோந்து பணியில் இருந்த காவலர் சவுந்தரராஜன், காவல்துறை சீருடையுடன் கடலில் குதித்து அலையில் இழுத்து செல்லப்பட்ட இரண்டு இளைஞர்களையும் தனி ஆளாக உயிருடன் மீட்டு கரைக்கு கொண்டு வந்தார்.
இதனைத் தொடர்ந்து அவர்கள் இருவரும் சிகிச்சைகாக புதுச்சேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. அவர்கள் உயிருக்கு எந்த பாதிப்பும் இல்லையென மருத்துவர்கள் கூறிவிட்டனர். இச்சம்பவம் குறித்து பெரிய கடை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், கடலில் மூழ்கிய இரண்டு இளைஞர்களை தனியொரு ஆளாக துரிதமாக செயல்பட்டு உயிருடன் காப்பற்றிய காவலர் சவுந்தரராஜனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
newstm.in

