Theme Check

மதுரையை கதிகலங்க வைத்த போஸ்டர்!! பாசக்கார பயபுள்ள செஞ்ச வேலைய பார்த்தீங்களா?!

அஞ்சலி போஸ்டரில் எமனுக்கு கண்டனம்.. மதுரையை கதிகலங்க வைத்த போஸ்டர்!!

மதுரையை கதிகலங்க வைத்த போஸ்டர்!! பாசக்கார பயபுள்ள செஞ்ச வேலைய பார்த்தீங்களா?!
X

மதுரையில் உயிரிழந்தவரின் ஆதரவாளர்கள் எமனுக்கு கண்டனம் தெரிவித்து போஸ்டர் ஒட்டியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

போஸ்டர் கலாச்சாரம் என்றாலே மதுரைக்கு மிகவும் நெருக்கமான கலாச்சாரங்களில் முக்கியமானதும் முதன்மையானதும் என்பது அனைவராலும் அறியப்பட்ட ஒன்று தான். நடிகர்களின் ரசிகர்கள், அரசியல் தலைவர்களின் தொண்டர்கள், திருமண விழாக்கள், கோயில் கொடை திருவிழாக்களில் மதுரை மக்கள் ஒட்டும் போஸ்டர்கள் அனைவரையும் தன்பக்கம் ஈர்க்கும். இம்முறை ஒருபடி மேலே சென்று, மதுரை வடக்குமாசி வீதியைச் சேர்ந்த அய்யாவு என்கிற முதியவர் ஒருவர் இறந்த துக்கம் தாளாது அவருடைய ஆதரவாளர்கள் அவரின் இழப்பினை அனுசரிக்கும் பொருட்டு அவருக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டியுள்ளனர்.

மதுரையை கதிகலங்க வைத்த போஸ்டர்!! பாசக்கார பயபுள்ள செஞ்ச வேலைய பார்த்தீங்களா?!அதில் தங்களுடைய எதிர்ப்பை, வலுவான கண்டனத்தை எமதர்மராஜாவின் மீது திருப்பியுள்ளனர். அவ்வகையில், ‘சிங்கத்தை பிடித்துச் சென்ற எமதர்மனுக்கு கண்டனம்’ என்று அச்சடித்து அங்கங்கே போஸ்டட் ஒட்டி வைத்துள்ளனர். இது தவிர இந்த போஸ்டரில், இயற்கை எய்திய முதியவரின் ஆதரவாளர்களாக பீம்பாய் வினோத், சீடை வினோத், வேட்டையன் பிரித்வி, குதிரைக் குத்தி சரவணன், நாய்ப்பால் ரஞ்சித் என்று சிலரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.

newstm.in

Tags:
Next Story
Share it