ரூ.5 லட்சம் மதிப்பில் தங்க மாஸ்க் அணிந்து வலம் வரும் சாமியார்.. கொரோனா விடுமா?
ரூ.5 லட்சம் மதிப்பில் தங்க மாஸ்க் அணிந்து வலம் வரும் சாமியார்.. கொரோனா விடுமா?

உலக நாடுகளை கொரோனா அச்சுறுத்தி வரும் நிலையில் தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்ள அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளி வேண்டும், அடிக்கடி கை கழுவ வேண்டும், கிருமி நாசினி பயன்படுத்த வேண்டும் என்பது தான். இதனை கடைபிடித்து மக்கள் ஒத்துழைப்பு அளித்தால் கொரோனாவை விரட்டி அடிக்க முடியும் என அரசு கூறி வருகிறது.
அந்த வகையில் மாஸ்க் என்பது அத்தியாவசிய ஒன்றாகிவிட்ட நிலையில் உத்தரபிரதேசத்தில் சாமியார் ஒருவர் தங்கத்தில் மாஸ்க் தயாரித்து அதனை அணிந்து கொண்டு வலம் வருகிறார். கான்பூரைச் சேர்ந்த மனோஜ் செங்கரை அப்பகுதி மக்கள் ‘தங்க பாபா’ என அழைக்கிறார்கள். இவர் ரூ.5 லட்சத்தில் தங்க முகக் கவசத்தை செய்து பயன்படுத்தி வருகிறார். இதற்கு ‘ஷிவ் ஸ்வர்ன் ரஷக் கொரோனா மாஸ்க்‘ என்று பெயரிட்டுள்ளார்.

தங்க முகக் கவசத்தை அணிவதற்கு முன்பு தினமும் அதற்கு பூஜை செய்து மந்திரத்தை ஓதியபின் அதை முகத்தில் அணிந்து கொள்கிறார். இதுகுறித்து அவர் கூறியதாவது, மக்கள் தங்களது முகக்கவசங்களை சரியாக அணிவதில்லை. கொரோனா 2ஆவது அலை கொடியது. இந்த தங்க முகக்கவசம் 3 அடுக்குகளை கொண்டது. 3 ஆண்டுகள் வரை பயன்படுத்த முடியும் என்றார்.
மேலும் தங்க முகக்கவசம் அணிந்து கொண்டு இருப்பதால் கொரோனா தனது அருகில் வராது என்றும் கூறினார். கசாமியார் மனோஜ் செங்கார் என்ற தங்க பாபா கழுத்தில் எப்போதும் 2 கிலோ நகைகளை அணிந்து வலம் வருவார் என்பது குறிப்பிடத்தக்கது.
newstm.in

