Theme Check

4500ஐ நெருங்கும் ஒரு கிராம் தங்கத்தின் விலை !!

4500ஐ நெருங்கும் ஒரு கிராம் தங்கத்தின் விலை !!

4500ஐ நெருங்கும் ஒரு கிராம் தங்கத்தின் விலை !!
X

தங்கம் என்பது மற்ற நாடுகளில் ஒரு முதலீடு மட்டுமே. ஆனால் இந்தியாவைப் பொறுத்தவரை தங்கம் என்பது கலாசாரமாகவே இருந்து வருகிறது. காதுகுத்து, கல்யாணம் என எந்த விஷேசம் என்றாலும் முன்னால் நிற்கிறது தங்கம்.

தங்கம் என்பது இந்தியாவில் வெறும் உலோகமல்ல சேமிப்பாகவும் பார்க்கப்படுகிறது. தங்கம் சேமிப்பது அத்தியாவசியம் என்ற நிலையில் அதன் விலையேற்றம் மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.தொடர் உயர்வும் ஒரு சவரன் தங்கத்தின் விலை 35 ஆயிரத்தை கடந்து சென்றதுமே தான் இதற்கு முக்கிய காரணம்.

இப்படி நாளுக்கு நாள் தங்கம் விலை உயர்ந்து தங்கத்தை தற்போது வாங்கலாமா? என்று மக்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். கொரோனா குறைந்து இயல்பு நிலைக்கு திரும்பிவிட்டால், தங்கத்தின் விலை குறைய வாய்ப்புள்ளதாக முதலீட்டு ஆலோசகர்கள் தெரிவிக்கின்றனர்.

தங்கத்தின் விலை இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு 240 ரூபாய் உயர்ந்துள்ளது. இந்நிலையில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.35,560-க்கு விற்பனையாகிறது. இன்று கிராமுக்கு 30 ரூபாய் உயர்ந்து, ரூ.4,445-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று மாலை 74,000 ரூபாயாக இருந்த நிலையில், இன்று காலையில் வெள்ளியின் விலை கிலோவுக்கு 200 ரூபாய் உயர்ந்து ரூ.74,200-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.74.20-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Tags:
Next Story
Share it