ராக்கெட் வேகத்தில் ஏறும் தங்கத்தின் விலை!!
ராக்கெட் வேகத்தில் ஏறும் தங்கத்தின் விலை!!

ஊரடங்கு காரணமாக இந்திய பொருளாதாரம் மிகப்பெரிய வரலாறு காணாத சரிவை சந்தித்து வருகிறது. அந்த வகையில் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 2020 ஆகஸ்ட் மாதத்தில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.43 ஆயிரத்தைத் தாண்டியது. அதன் பின் படிப்படியாக விலை குறைந்தாலும் கடந்த சில வாரங்களாக ஏற்ற, இறக்கமாகவே இருந்து வருகிறது.
இந்நிலையில் இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு 240 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.35,616-க்கு விற்பனையாகிறது. இன்று கிராமுக்கு 30 ரூபாய் உயர்ந்து, ரூ.4,452-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விளையும் தங்கத்திற்கு ஈடாக உயர்ந்து கொண்டே செல்கிறது என்றே கூறலாம். ஒரு கிலோ வெள்ளியின் விலை இன்று காலை ரூ.73,300-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.73.30-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
NEWSTM.IN
Tags:
Next Story

