Theme Check

கொரோனாவின் தீவிரம் இன்னும் பிரதமருக்கு புரியவில்லை !! ராகுல் காந்தி காட்டம்

கொரோனாவின் தீவிரம் இன்னும் பிரதமருக்கு புரியவில்லை !! ராகுல் காந்தி காட்டம்

கொரோனாவின் தீவிரம் இன்னும் பிரதமருக்கு புரியவில்லை !! ராகுல் காந்தி காட்டம்
X

கொரோனா முதல் அலையின்போது மத்திய அரசு நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பித்தது. அதன்பின்னர் படிபடியாக தளர்வுகள் அறிவித்து பின்னர் மாநில அரசுகள் முடிவு செய்துக்கொள்ளலாம் என கூறியது. ஆனால் அதன்பின்னர் எவ்வித நடவடிக்கையும் இன்றி தளர்வுகள் அகற்றப்பட்டதால் இரண்டாவது அலை தீவிரமானது.

தற்போது நாட்டில் பல மாநிலங்கள் கொரோனாவின் இரண்டாவது அலை பிடியில் சிக்கி தவித்து வருகிறது. தடுப்பூசி, ஆக்சிஜன், மருந்து விநியோகத்தில் மத்திய அரசு பாரபட்சம் காட்டுவதாக புகார் எழுந்தது. இந்த நிலையில், மத்திய அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் தடுப்பூசி திட்டம் தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் எம்.பி.யுமான ராகுல் காந்தி கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.

ராகுல் காந்தி இன்று காணொளி வாயிலாக பத்திரிகையாளர்களிடையே பேசினார். அப்போது அவர் கூறியதாவது, கொரோனா வைரஸ் குறித்து மத்திய அரசுக்கு நாங்கள் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்தோம். பின்னர், கொரோனாவுக்கு எதிராக இந்தியா வெற்றி பெற்றதாக பிரதமர் மோடி தெரிவித்திருந்தார்.

இந்த நோய் தொடர்ந்து பரவி வரும் நோய். கொரோனாவை தடுக்க மூன்று நான்கு வழிகள் உள்ளன. அதில் தடுப்பூசி தான் கொரோனாவுக்கு நிரந்தர தீர்வாகும். ஊரடங்கு உத்தரவு போட்டு கட்டுப்பாடுகளை விதிப்பது மற்றும் முக கவசங்கள் அணிவது தற்காலிக தீர்வுதான் என நாங்கள் கூறியிருந்தாம்.

ஆனால், இப்போது வரை பிரதமரோ மத்திய அரசோ கொரோனாவின் தீவிரத்தை புரிந்துகொள்ளவில்லை. கொரோனா இரண்டாவது அலை இந்த அளவுக்கு பரவுவதற்கு பிரதமரின் அணுகுமுறைதான் காரணம். தற்போது தெரிவிக்கப்படும் இறப்பு விகிதம் பொய். அரசாங்கம் உண்மையைச் சொல்ல வேண்டும்.

கொரோனாவுக்கு எதிராக போராடுவதன் தன்மையை அரசு புரிந்து கொள்ளவில்லை. இந்த வைரசின் பிறழ்வுகள் ஏற்படுத்தும் ஆபத்துகளைப் புரிந்து கொள்ளுங்கள். 3 சதவீதம் மட்டுமே தடுப்பூசி போடுவதால், 97 சதவீத மக்கள் வைரசால் பாதிக்கப்படுவதற்கு அனுமதிக்கிறீர்கள் என்றும் அவர் கடுமையாக சாடியுள்ளார்.

newstm.in

Tags:
Next Story
Share it