படப்பிடிப்பில் விபத்து நேர்ந்தால் தயாரிப்பு நிறுவனம் தான் பொறுப்பு!! லைகாவுக்கு கமல் கடிதம்!!
இந்தியன் 2 விபத்து குறித்து லைகா நிறுவனத்திற்கு நடிகர் கமல்ஹாசன் கடிதம் எழுதியுள்ளார்.படப்பிடிப்பில் விபத்து நேர்ந்தால் தயாரிப்பு நிறுவனம் முழு பொறுப்பையும் ஏற்க வேண்டும் என நடிகர் கமல்ஹாசன் கடிதம் எழுதியுள்ளார்.

இந்தியன் 2 விபத்து குறித்து லைகா நிறுவனத்திற்கு நடிகர் கமல்ஹாசன் கடிதம் எழுதியுள்ளார்.படப்பிடிப்பில் விபத்து நேர்ந்தால் தயாரிப்பு நிறுவனம் முழு பொறுப்பையும் ஏற்க வேண்டும் என நடிகர் கமல்ஹாசன் கடிதம் எழுதியுள்ளார்.

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகும் படம் இந்தியன் 2. இந்தப் படத்தை லைகா புரடெக்ஷன் நிறுவனம் பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கிறது. இதில் கமல்ஹாசனுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். இந்தப் படத்தின் சில காட்சிகள் பூந்தமல்லி அருகே நசரத்பேட்டையில் உள்ள ஈவிபி பிலிம் சிட்டியில் ஷுட் நடைபெற்று வந்தது.

கடந்த புதன்கிழமை இரவு படப்பிடிப்பின் இடைவேளையின்போது கிரேன் சரிந்து கீழே விழுந்து ஏற்பட்ட விபத்தில் உதவி இயக்குநர் கிருஷ்ணா, புரெடெக்ஷன் உதவியாளர் மது, ஆர்ட் உதவியாளர் சந்திரன் ஆகிய மூன்று பேர் உயிரிழந்தனர். பலத்த காயமடைந்த 12 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தமிழ் திரைத்துறையை சேர்ந்தவர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்த விபத்தில் இயக்குநர் ஷங்கர், நடிகர் கமல்ஹாசன், நடிகை காஜல் ஆகியோர் நூலிழையில் உயிர் தப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் லைகா நிறுவனத்திற்கு கடிதம் எழுதியுள்ளார்.அதில், இனி திரைப்படம் தயாரிக்கும் போது கதாநாயகன் முதல் கடைநிலை ஊழியர் வரை அனைவரது பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும். படப்பிடிப்பு தளத்தில் விபத்து ஏற்பட்டால் அதற்கான முழு பொறுப்பையும் தயாரிப்பு நிறுவனம் ஏற்க வேண்டும். இனிமேல் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்த பிறகு படப்பிடிப்பை தொடங்க வேண்டும் என கமல் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
newstm.in

