Theme Check

திருமணமான ஒரே வாரத்தில் மகளை வெட்டிக் கொன்ற தந்தை!! மதுரையில் பரபரப்பு!!

மதுவால் ஏற்பட்ட கோரம்.. திருமணமான ஒரே வாரத்தில் மகளுக்கு அரிவாள் வெட்டு! தந்தை வெறிச்செயல்!!

திருமணமான ஒரே வாரத்தில் மகளை வெட்டிக் கொன்ற தந்தை!! மதுரையில் பரபரப்பு!!
X

மதுரை மாவட்ட பேரையூரில் திருமணமான ஒரே வாரத்தில் மதுபோதையில் பெற்ற மகளை தந்தையே வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகாவிற்குட்பட்ட பெரிய பூலாம்பட்டியைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவர் தனது இரண்டாவது மகள் மின்னல் கொடியை அதே பகுதியைச் சேர்ந்த ராமர் என்பவருக்கு கடந்த 12ம் தேதி திருமணம் முடித்து கொடுத்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் காலை மகள் மின்னல் கொடியின் மதிப்பெண் சான்றிதழை பள்ளியில் இருந்து பெற்று வருகிறோம் என மருமகனிடம் கூறிவிட்டு மகளை மாரியப்பன் அழைத்து சென்றுள்ளார். அப்போது மாரியப்பன் மது அருந்தியிருந்ததால் அதனை மகள் மின்னல் கொடி தந்தையை கண்டித்தாக கூறப்படுகிறது.

திருமணமான ஒரே வாரத்தில் மகளை வெட்டிக் கொன்ற தந்தை!! மதுரையில் பரபரப்பு!!

இதில் இருவருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்ட நிலையில் மாரியப்பன் தன் பையில் வைத்திருந்த அரிவாளால் மின்னல் கொடியை பலமாக வெட்டியதாக கூறப்படுகிறது. படுகாயமடைந்த மின்னல் கொடியை அக்கம் பக்கத்தினர் மீட்டு மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

திருமணமான ஒரே வாரத்தில் மகளை வெட்டிக் கொன்ற தந்தை!! மதுரையில் பரபரப்பு!!

இச்சம்பவமறிந்து விரைந்து வந்த பேரையூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் மதியழகன் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து மதுபோதையில் இருந்த தந்தை மாரியப்பனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் திருமணம் முடிந்து ஒரு வாரம் கூட ஆகாத நிலையில் புதுமணப் பெண் அவரது தந்தையால் கொடுரமாக வெட்டப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in

Tags:
Next Story
Share it