கேசினோவில் பணம் வென்ற இந்தியரை 50 மைல் பின்தொடர்ந்த கொள்ளையன்... !!
கேசினோவில் பணம் வென்ற இந்தியரை 50 மைல் பின்தொடர்ந்த கொள்ளையன்... !!

அமெரிக்காவின் நியூஜெர்சி மாகாணத்தில் உள்ள ப்ளைன்ஸ்போரோவில் ஸ்ரீ ரங்கா அரவபள்ளி (வயது 54) வசித்து வருகிறார். பார்மா எக்சிகியூட்டிவான இவர், கடந்த செவ்வாயன்று பிலடெல்பியாவின் வடக்கே பென்சலேமில் உள்ள பார்க்ஸ் கேசினோ ஒன்றிற்கு சென்றிருக்கிறார்.

அங்கு அவர் 10,000 டாலர்கள் பரிசு வென்றதைக் கவனித்த ஒருவர், அவரைத் தனது காரில் பின்தொடர்ந்திருக்கிறார். அரவபள்ளி வீட்டுக்கு வந்ததும், அவருக்குத் தெரியாமல் அவரது வீட்டின் பின் பக்கக் கதவு ஒன்றை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைந்த அந்த நபர் அரவபள்ளியை சுட்டுக் கொன்றிருக்கிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் வாழ்பவர்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்நிலையில், கொலையாளியைத் தேடிய போலீசார், அரவபள்ளியின் காரை மற்றொரு கார் தொடர்வதையும், பிறகு அந்த கார் மட்டும் பிலடெல்பியாவுக்கு திரும்புதையும் கவனித்துள்ளார்கள்.

இரண்டே நாட்களில், ஜெகாய் ஜான் ரீட் (வயது 27) என்ற நபரைக் போலீசார் கைது செய்துள்ளனர். அரவபள்ளியை முன் பின் அறியாத ஜெகாய், அவர் கேசினோவில் பணம் வென்றதைக் கவனித்துவிட்டு, அவரது பணத்துக்காகவே 50 மைல் பயணித்து அவரைப் பின்தொடர்ந்து அவரைக் கொலை செய்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

