Theme Check

பெண்ணை 200 மீட்டர் தூரத்திற்கு ரோட்டில் இழுத்துச் சென்ற கொள்ளையர்கள்... அதிர்ச்சி வீடியோ!

பெண்ணை 200 மீட்டர் தூரத்திற்கு ரோட்டில் இழுத்துச் சென்ற கொள்ளையர்கள்... அதிர்ச்சி வீடியோ!

பெண்ணை 200 மீட்டர் தூரத்திற்கு ரோட்டில் இழுத்துச் சென்ற கொள்ளையர்கள்... அதிர்ச்சி வீடியோ!
X

செல்போனை பறிக்கும் முயற்சியில் பெண்ணை கொள்ளையர்கள் தரதரவென சாலையில் இழுத்துச் செல்லும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி சாலிமார் பாக் பகுதியில் ஒரு பெண் சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர், திடீரென அந்த பெண்ணிடம் இருந்த செல்போனைப் பறித்தனர். ஆனால் செல்போனை அந்த பெண் கெட்டியாக பிடித்துக்கொண்டார்.

girl

இதையடுத்து அந்த மர்ம நபர்கள் அந்தப் பெண்ணை சாலையில் 200 மீட்டர் தொலைவுக்கு தரதரவென்று அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவானது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இருசக்கர வாகனத்தில் இழுத்துச் சென்றுள்ளனர். அவர் சாலையில் விழுந்ததும், குற்றவாளிகள் பைக்கில் தப்பிச் சென்றுவிட்டனர். மக்கள் நடமாட்டமிக்க சாலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதைப்பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்து, அவர்களைப் பிடிக்க முயன்றனர். பிறகு அந்தப் பெண்ணை அவர்கள் சாலையில் விட்டுவிட்டு வாகனத்தில் தப்பிச் சென்றனர். பிறகு பாதிக்கப்பட்ட பெண்ணை பொதுமக்கள் மீட்டு அருகே இருந்த மருத்துவமனையில் சேர்த்தனர். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் குற்றவாளிகளை டெல்லி காவல் துறையினர் தேடி வருகின்றனர்.


newstm.in

Tags:
Next Story
Share it