Theme Check

ஓட்டிப் பார்ப்பதாக வாங்கி புல்லட் உடன் எஸ்கேப் ஆன காதல் ஜோடி!!

ஓட்டிப் பார்ப்பதாக வாங்கி புல்லட் உடன் எஸ்கேப் ஆன காதல் ஜோடி!!

ஓட்டிப் பார்ப்பதாக வாங்கி புல்லட் உடன் எஸ்கேப் ஆன காதல் ஜோடி!!
X

சேலத்தில் செகண்ட் ஹேண்ட் வாகனங்கள் விற்பனை செய்யும் கடையில், ஓட்டி பார்ப்பதாக கூறி புல்லட்டை திருடி சென்ற காதல் ஜோடியை போலீசார் தேடி வருகின்றனர்.

சாந்தி தியேட்டர் பகுதியில் ராம்பாலாஜி என்பவருக்கு சொந்தமான, பழைய இருசக்கர வாகனங்களை வாங்கி, விற்பனை செய்யும் கன்சல்டிங் உள்ளது. இந்த கன்சல்டிங் கடைக்கு இரண்டு இளம் ஜோடியினர் வந்தனர் .

புல்லட் ஒன்று வாங்க வந்திருப்பதாக கூறி, அங்கிருந்த விலை உயர்ந்த பைக்குகளை அவர்கள் சிறிது நேரம் பார்வையிட்டனர். அதில் 1.75 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஒரு பைக்கை தேர்வு செய்தனர் .

வண்டியை , ஓட்டிப்பார்த்து விட்டு வருவதாக அவர்கள் கூறினர். கடை ஊழியர்களும், இன்னொரு ஜோடி இருக்கிறதே என்ற எண்ணத்தில் நம்பி வண்டியை எடுத்துப்போக அனுமதித்தனர்.

bullet 2

நீண்ட நேரம் ஆகியும் பைக்கை ஓட்டி சென்ற காதல் ஜோடி திரும்பி வராததால் அதிர்ச்சியடைந்த கடை ஊழியர்கள் , இன்னொரு ஜோடியிடம் அவர்களை தொலைபேசியில் அழைக்குமாறு கேட்டுள்ளனர்.

அவர்கள் யார் என்றே தங்களுக்கு தெரியாது என்றும் நாங்கள் தனியாக வந்துள்ளதாகவும் கூறினர் . இதனால் அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் ராம்பாலாஜிக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

பின்னர் கடையில் இருந்த சிசிடிவி கேமரா மூலம் பதிவான காட்சிகளை பார்த்து, இரண்டு ஜோடிகளுக்கும் தொடர்பு இருப்பதாக சந்தேகம் அடைந்த ஊழியர்கள், கடையில் இருந்த இன்னொரு ஜோடியை பிடித்து டவுன் குற்றப்பிரிவு போலீசில் ஒப்படைத்தனர்.

bullet 2

போலீசார் விசாரித்தபோது, வண்டியில் சென்ற பெண்ணை மட்டும் தங்களுக்கு தெரியும் என பிடிபட்ட ஜோடி கூறியுள்ளனர் . அதன் பேரில் தகவல் தெரிவிக்கப்பட்டு, வண்டியில் சென்ற பெண்ணின் உறவினர்கள் டவுன் குற்றப்பிரிவு அலுவலகத்திற்கு வந்தனர் .

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் வண்டியை ஓட்டிச்சென்ற இளைஞர் கிருஷ்ணகிரி அருகில் உள்ள குப்பத்தை சேர்ந்த பிரவின்குமார் என்பது தெரியவந்துள்ளது .வண்டியில் சென்ற பெண் அவரை காதலித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இது குறித்த புகாரின்பேரில் டவுன் குற்றப்பிரிவு போலீசார் , வண்டியை எடுத்துச் சென்ற காதல் ஜோடியை தேடி வருகின்றனர்.

newstm.in

Next Story
Share it