Theme Check

பள்ளி மாணவனுக்கு கொடி கயிறே தூக்கு கயிறான சோகம்!!

சென்னை அம்பத்தூர், புதூர் மெயின் ரோட்டில் வசித்து வருபவர் லிங்கம். இவரது மனைவி உமாராணி. இவர்களுக்கு அட்சயா என்ற மகளும், தர்ஷன் என்ற மகனும் உள்ளனர். தர்ஷன் (14) 10-ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், பள்ளி முடித்து விட்டு வீட்டுக்கு வந்த தர்ஷன் குளிக்க சென்றுள்ளார். பல மணி நேரமாகியும் கதவை தர்ஷன் திறக்கவில்லை.

பள்ளி மாணவனுக்கு கொடி கயிறே தூக்கு கயிறான சோகம்!!
X

சென்னை அம்பத்தூர், புதூர் மெயின் ரோட்டில் வசித்து வருபவர் லிங்கம். இவரது மனைவி உமாராணி. இவர்களுக்கு அட்சயா என்ற மகளும், தர்ஷன் என்ற மகனும் உள்ளனர். தர்ஷன் (14) 10-ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், பள்ளி முடித்து விட்டு வீட்டுக்கு வந்த தர்ஷன் குளிக்க சென்றுள்ளார். பல மணி நேரமாகியும் கதவை தர்ஷன் திறக்கவில்லை.

இதையடுத்து லிங்கம் அறைக்கு சென்று பார்த்த போது, ரூமின் பால்கனியில் தர்ஷன் கீழே விழுந்து கிடந்ததை கண்டனர். தர்ஷனின் கழுத்தில் கயிறு ஒன்று இறுகிக் கிடந்தது. மயங்கிய நிலையில் கிடந்த மகனை கண்டு பதறியவர், உடனடியாக ஆஸ்பத்திரிக்கு தூக்கி கொண்டு ஓடினார். ஆனால் தர்ஷன் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். தகவலறிந்து அம்பத்தூர் போலீசாரும் விரைந்து வந்தனர்.தர்ஷன் உயிரிழந்தது குறித்து விசாரணையும் மேற்கொண்டார்கள். அப்போது தன் ரூமை பூட்டிக் கொண்டு குளித்து முடித்த தர்ஷன் துணி காய போட பால்கனிக்கு வந்துள்ளார்.

ஆனால் கொடிகயிறு உயரத்தில் இருந்ததால், ஸ்டூலை இழுத்து போட்டு துணிகளை காய வைத்துள்ளார். அப்போது ஸ்டூல் தவறி கீழே விழுந்த போது, தர்ஷனும் தடுமாறி அங்கிருந்த கொடிக்கயிற்றின் மீது விழுந்து விட்டார். அந்த கயிறு அவரது கழுத்தை இறுக்கி விட்டது. பலமான கயிறு என்பதால் தர்ஷனின் கழுத்தை அறுத்துள்ளது. இதனாலேயே அவர் இறந்திருப்பதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. மகனை கட்டிப்பிடித்து பெற்றோர் கதறியது காண்போரை கண்கலங்க செய்தது.

newstm.in

Tags:
Next Story
Share it