Theme Check

அதே பரபரப்பு.. டெல்லி செல்லும் ஓ.பன்னீர்செல்வம் !!

அதே பரபரப்பு.. டெல்லி செல்லும் ஓ.பன்னீர்செல்வம் !!

அதே பரபரப்பு.. டெல்லி செல்லும் ஓ.பன்னீர்செல்வம் !!
X

அதிமுகவில் ஒற்றைத் தலைமை குறித்த விவாதம் கடந்த ஒருவாரமாக சர்ச்சையை ஏற்படுத்தி வந்தது. ஒற்றைத் தலைமை கருத்துக்கு ஓ.பன்னீர்செல்வம் தரப்பு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வந்தது. பின்னர் யாருக்கு ஆதரவு அதிகம் என்ற போட்டியில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் பலரும் எடப்பாடி பக்கம் சென்றனர்.

இந்த சூழலில், அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்துக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அந்த வழக்கில் உயர் நீதிமன்றம் தடைஉத்தரவு ஏதும் பிறப்பிக்காத நிலையில் பொதுக்குழுவில் புதிய தீர்மானம் நிறைவேற்றக் கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்தநிலையில், அதிமுக பொதுக்குழு கூட்டம் திட்டமிட்டபடி இன்று நடைபெற்றது. ஒரே மேடையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அமர்ந்திருந்தனர். எனினும் இருவரும் சந்திக்கவோ, பேசவோ இல்லை.

osp

பின்னர் பொதுக்குழுவை அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் நடத்துவதற்கு ஓ.பன்னீர்செல்வம் முன்மொழிந்தார். ஓ.பன்னீர்செல்வம் முன்மொழிந்ததை எடப்பாடி பழனிசாமி வழிமொழிந்தார். அதை தொடர்ந்து பொதுக்குழுவில் நிறைவேற்றப்படவிருந்த தீர்மானங்கள் அவையில் அனைவரின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளதாகவும், தீர்மானங்களை முன்னாள் அமைச்சர் பொன்னையன் முன்மொழிய, முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினருமான திண்டுக்கல் சீனிவாசன் வழிமொழிவார் என தெரிவிக்கப்பட்டது.

ஆனால், பொதுக்குழுக் கூட்டத்தில் ஏற்கெனவே திட்டமிட்டபடி தீர்மானங்கள் நிறைவேற்றப்படவில்லை. மாறாக, மீண்டும் ஜூலை 11ஆம் தேதி மீண்டும் பொதுக்குழு நடைபெறும். அப்போது ஒற்றைத் தலைமை தேர்ந்தெடுக்கப்படுவார் என்று முடிவு எடுக்கப்பட்டது. அதனையடுத்து, பொதுக்குழு கூட்டத்திலிருந்து ஓ.பன்னீர் செல்வம் தரப்பினர் வெளிநடப்பு செய்தனர். அவர் மீது தண்ணீர் பாட்டில் எல்லாம் வீசப்பட்டது.

osp

இந்தநிலையில், ஓ.பன்னீர் செல்வம் டெல்லி செல்வதற்கு முடிவு செய்துள்ளார். ஓ.பன்னீர் செல்வம் இன்று இரவே டெல்லிக்கு புறப்பட்டு செல்கிறார். டெல்லி செல்லும் அவர் தலைமைத் தேர்தல் ஆணையரை சந்திக்க முடிவு செய்துள்ளார். மேலும் பொதுக்குழு செயற்குழுவில் நடந்தவை குறித்தும், ஏற்கனவே உள்ள முடிவுகள், புதிதாக அறிவிக்கப்பட்ட முடிவுகள் குறித்தும் புகார் அளிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

newstm.in


Next Story
Share it