Theme Check

ஊழியர்களின் அலட்சியத்தால் மூடாமல் இருந்த பாதாள சாக்கடை, பள்ளத்தில் விழுந்து மாயமான நபர்..!

ஊழியர்களின் அலட்சியத்தால் மூடாமல் இருந்த பாதாள சாக்கடை, பள்ளத்தில் விழுந்து மாயமான நபர்..!

ஊழியர்களின் அலட்சியத்தால் மூடாமல் இருந்த பாதாள சாக்கடை, பள்ளத்தில் விழுந்து மாயமான நபர்..!
X

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் நேற்றிரவு பெய்த கனமழையால் சாலைகளில் வெள்ளம் தேங்கிய நிலையில், மழைநீரில் நடந்து சென்ற நபர், நகராட்சி ஊழியர்களின் அலட்சியத்தால் மூடாமல் இருந்த பாதாள சாக்கடை கால்வாய் பள்ளத்தில் விழுந்து அடித்துச் செல்லப்பட்டார்.

மணிகொண்ட பகுதியில் பாதாள சாக்கடை கால்வாய் சீரமைப்பு பணியில் ஈடுபட்ட நகராட்சி ஊழியர்கள், சாலையின் நடுவே இருந்த பள்ளத்தை மூடாமல் அப்படியே திறந்துவைத்துவிட்டு சென்றுள்ளனர்.

இந்நிலையில் நேற்றிரவு அப்பகுதியில் பெய்த கனமழையால் வெள்ளம் சாலையில் தேங்கியது. அப்போது அந்த வழியாக நடந்து வந்த ஒரு நபர் பள்ளம் இருப்பது தெரியாமல் அதற்குள் கால் தவறி விழுந்ததில், கால்வாய்க்குள் அடித்துச் செல்லப்பட்டார்.

மழை, வெள்ளத்தை வீட்டின் மாடியில் இருந்து வீடியோ எடுத்த ஒருவரின் செல்போனில் இந்த காட்சிகள் பதிவான நிலையில், அவர் அளித்த தகவலின் பேரில் மாயமான நபரை தீயணைப்பு வீரர்கள் தேடி வருகின்றனர்.

Tags:
Next Story
Share it