Theme Check

சிக்கன் சாப்பிட்ட இளம்பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி.. பிரபல உணவு நிர்வாகம் மன்னிப்பு !

சிக்கன் சாப்பிட்ட இளம்பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி.. பிரபல உணவு நிர்வாகம் மன்னிப்பு !

சிக்கன் சாப்பிட்ட இளம்பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி.. பிரபல உணவு நிர்வாகம் மன்னிப்பு !
X

இளம்பெண் பிரபல உணவகத்தில் வாங்கி சாப்பிட்ட உணவில் பெரிய சிலந்தி பூச்சி இருந்ததை கண்டு பெரும் அதிர்ச்சி அடைந்தார்.

பிரிட்டனின் Cheshire கவுண்டியை சேர்ந்தவர் இளம்பெண் கேட்டி மோஸ் (21). இவர் சில தினங்களுக்கு முன்னர் அங்குள்ள பிரபல மெக்டொனால்டு உணவகத்தில் இருந்து பன்றி இறைச்சி, சிக்கன், சிப்ஸ் மற்றும் பர்கரை மதிய உணவாக ஆர்டர் செய்தார்.

britten food

இதையடுத்து கவரால் சுற்றப்பட்டு அந்த உணவுகள் மோஸ்க்கு வந்து சேர்ந்தது. நல்ல அகோர பசியில் இருந்த இளம்பெண் மோஸ், அதனை சாப்பிட தொடங்கினார். தான் ஆர்டர் செய்த உணவில், 4ல் 3 பங்கை சாப்பிட்ட நிலையில் கடைசியாக சிக்கன் உணவை சாப்பிட தொடங்கினார். அப்போது, ஒரு கட்டத்தில் ஒரு உணவை கடிக்க சிரமமாக இருந்தது, அது கீரையாக இருக்கும் என நினைத்து பார்த்த மோஸ்க்கு அதிர்ச்சி காத்திருந்தது.

britten food

பின்னர் அந்தப் பெண் மிகவும் வெறுப்படைந்து, பணத்தைத் திரும்ப பெறுவதற்காக மெக்டொனால்டு கடையைத் தொடர்புகொண்டார். இவ்வளவு பெரிய சிலந்தி பூச்சி உணவில் இருந்ததை கண்டு அவர் அதிர்ச்சியடைந்ததாகவும், இது போன்ற சிலந்தியை நேரில் கண்டதே இல்லை எனவும் அப்போது தெரிவித்தார்.

அவரது புகாரை தொடர்ந்து, உணவுக்காக கொடுத்த பணம் அவரிடம் திரும்ப கொடுக்கப்பட்டதாகவும், மேலும் வேறு உணவு வழங்கப்பட்டதாகவும் கடையின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். மேலும் சிலந்தி உணவு கவரில் இருந்ததற்கு மன்னிப்பு கேட்டுள்ளார். ஆனால் தனக்கு மாற்று உணவு மட்டும் போதாது, இழப்பீடு தொகை வேண்டும் என மோஸ் கோரியுள்ளார்.


newstm.in

Next Story
Share it