Theme Check

அந்த இடங்களில் டாட்டூ போட சென்ற 6 இளம்பெண்களை பலாத்காரம் செய்த கடைக்காரர்

அந்த இடங்களில் டாட்டூ போட சென்ற 6 இளம்பெண்களை பலாத்காரம் செய்த கடைக்காரர்

அந்த இடங்களில் டாட்டூ போட சென்ற 6 இளம்பெண்களை பலாத்காரம் செய்த கடைக்காரர்
X

உடலில் மறைவான இடங்களில் டாட்டூ போட சென்ற பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த கலைஞரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்தவர் சுஜீஷ் (35). இவர் அங்குள்ள சேராநல்லூர் என்ற இடத்தில் டாட்டூ ஸ்டுடியோ நடத்தி வருகிறார். இவரது திறமையான டாட்டூ வடிவத்தால் கேரளாவில் மிகவும் பிரபலமான ஸ்டுடியோவாக பெயர் எடுத்தது. இங்கு நடிகைகள் உள்பட ஏராளமான இளம்பெண்கள் தினமும் வருவதும் அவர்களுக்கு சுஜீஷ் தான் டாட்டூ போடுவது வழக்கம்.

இங்கு, பல இளம்பெண்கள் தங்களது உடலில் மறைவான இடங்களில் கூட டாட்டூ போடுவதற்காக வருவது உண்டு என கூறப்படுகிறது. அவர்களுக்கென தனி அறைக்கு அழைத்து சென்று சுஜீஷ் டாட்டூ வரைவார்.

breast_tattoo_breast_tattoo_

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு டாட்டூ போட சென்ற தன்னை சுஜீஷ் பாலியல் பலாத்காரம் செய்துவிட்டதாக, இளம்பெண் ஒருவர் பேஸ்புக்கில் குறிப்பிட்டிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. ரகசிய இடத்தில் டாட்டூ போட சென்றப்போது சுஜீஷ் பலாத்காரம் செய்ததாக குறிப்பிட்டிருந்தார். பின்னர் மேலும் சில இளம்பெண்கள் தங்களையும் சுஜீஷ் பலாத்காரம் செய்ததாக கூறினர். இந்த விவகாரம் கேரளாவில் புயலை கிளப்பியது.

எனினும் இது தொடர்பாக யாரும் போலீசில் புகார் செய்யாமல் இருந்தனர். ஆனாலும் கொச்சி போலீசார் நடவடிக்கை எடுக்க தீர்மானித்தனர். இதனை அறிந்ததும் டாட்டூ கலைஞர் சுஜீஷ் தலைமறைவானார்.

breast_tattoo_

இதனையடுத்தே, சுஜீஷ் தங்களை பலாத்காரம் செய்ததாக 6 இளம்பெண்கள் கொச்சி போலீசில் புகார் செய்தனர். இதையடுத்து எர்ணாகுளம் அருகே பெரும்பாவூர் என்ற இடத்தில் ஒரு வீட்டில் தலைமறைவாக இருந்த சுஜீஷை போலீசார் கைது செய்தனர். இவர் மேலும் பல பெண்களை பலாத்காரம் செய்திருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். இதையடுத்து அவரிடம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

newstm.in

Tags:
Next Story
Share it