மவுனம் காக்கும் சின்னம்மா...
சொத்து குவிப்பு வழக்கில் நீதிமன்றம் விதித்த 10 கோடி ரூபாய் அபராதத்தை சசிகலா இதுவரை செலுத்தாமல் டிமிக்கி கொடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சொத்து குவிப்பு வழக்கில் நீதிமன்றம் விதித்த 10 கோடி ரூபாய் அபராதத்தை சசிகலா இதுவரை செலுத்தாமல் டிமிக்கி கொடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சொத்து குவிப்பு வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, இளவரசி, ஜெயலலிதாவின் முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரன் ஆகியோருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி மைக்கேல் குன்ஹா தீர்ப்பளித்தார்.
மேல் முறையீட்டு வழக்கில் இந்த தீர்ப்பை உறுதி செய்த உச்ச நீதிமன்றம், சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் தலா 10 கோடி ரூபாய் அபராதமாக செலுத்த வேண்டும் என உத்தரவிட்டது.

2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 15-ம் தேதி முதல் சசிகலா உள்ளிட்ட 3 பேரும் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
தயக்கமின்றி சிறைக்கு சென்ற சசிகலா, நீதிமன்றத்தில் அபாராதம் கட்டுவதில் மட்டும் பின்வாங்கி வருகிறார். சின்னம்மானா....சும்மாவா...
newstm.in

