இந்தியாவின் நிலை கவலையளிக்கிறது.. இது தான் ஒரேவழி.. உலக சுகாதார அமைப்பின் தலைவர்
இந்தியாவின் நிலை கவலையளிக்கிறது.. இது தான் ஒரேவழி.. உலக சுகாதார அமைப்பின் தலைவர்

இந்தியாவின் கொரோனா பாதிப்புகள் மிகவும் கவலையளிப்பதாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் தெரிவித்தார்.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்தப்போதும் பல்வேறு ஆலோசனைகளை வழங்கியது உலக சுகாதார அமைப்பு. தற்போது அவைகள் தான் கடைபிடிக்கப்படுகிறது. தற்போது இந்தியா உள்ளிட்ட ஒருசில நாடுகளில் தான் கொரோனா பாதிப்பு மிகத்தீவிரமாக உள்ளது. அதனை கட்டுப்படுத்த இந்தியாவுக்கு பல்வேறு நாடுகள் உதவி செய்து வருகினறன.
இந்த நிலையில், இந்தியாவில் கொரோனா பரவல் குறித்து பேசிய உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ், இந்தியாவில் மருத்துமனைகள் நிரம்பியுள்ளன, இறப்புகள் அதிகமாக உள்ளது. அவசரநிலை போன்ற சூழல் ஏற்பட்டும் இந்தியாவில் கொரோனா கட்டுப்பாட்டுக்குள் வரவில்லை என்று தெரிவித்தார்.

மேலும், தொற்றுநோயின் இரண்டாம் ஆண்டு, முதல் ஆண்டைவிடவும் மிகவும் ஆபத்தானதாக உள்ளது என்றும் எச்சரித்தார். இந்தியாவின் கொரோனா பாதிப்புகளுக்கு உலக சுகாதார நிறுவனம் உதவி வருவதாகவும், ஆயிரக்கணக்கான ஆக்ஸிஜன் செறிவூட்டிகள், நடமாடும் கள மருத்துவமனைகளுக்கான கூடாரங்கள், முகக்கவசங்கள் மற்றும் பிற மருத்துவப் பொருட்களை இந்தியாவுக்கு அனுப்பியுள்ளோம் என்றும் கூறினார்.

நேபாளம், இலங்கை, வியட்நாம், கம்போடியா, தாய்லாந்து, அமெரிக்கா மற்றும் எகிப்து ஆகிய நாடுகளிலும் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. கொரானோ ஏற்கெனவே உலகெங்கிலும் 3.3 மில்லியனுக்கும் அதிகமான உயிர்களை பறித்துவிட்டது என்று குறிப்பிட்டுள்ள டெட்ரோஸ் அதானோம், பொது சுகாதார நடவடிக்கைகள் மற்றும் தடுப்பூசி வழங்குதல் மூலம் உயிர்களையும் வாழ்வாதாரங்களையும் காப்பாற்றுவதுதான் தொற்றுநோயிலிருந்து வெளியேறுவதற்கான ஒரே வழி என்று அவர் கூறினார்.
newstm.in

