Theme Check

இலங்கை நிலைமை இந்தியாவுக்கு ஏற்படலாம்.. மத்திய அரசு அதிகாரிகள் எச்சரிக்கை

இலங்கை நிலைமை இந்தியாவுக்கு ஏற்படலாம்.. மத்திய அரசு அதிகாரிகள் எச்சரிக்கை

இலங்கை நிலைமை இந்தியாவுக்கு ஏற்படலாம்.. மத்திய அரசு அதிகாரிகள் எச்சரிக்கை
X

இதுவரை இல்லாத வகையில் இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கிதவித்து வருகிறது. வின்ணை முட்டும் அளவுக்கு அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயுக்கு கடும் தட்டுப்பாடு. தினமும் 10 மணி நேரத்துக்கும் மேலாக மின்வெட்டு நிலவுகிறது.

இதனால் மக்கள் வீதியில் இறங்கி போராடத்தொடங்கியுள்ளன. இந்த நிலையில், இப்படியொரு சூழல் இந்தியாவுக்கும் ஏற்படலாம் என மத்திய அரசு அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

மத்திய அரசின் பல்வேறு துறை செயலர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார். இதில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், பிரதமரின் முதன்மை செயலர் பி.கே.மிஸ்ரா, அமைச்சரவை செயலர் ராஜிவ் கவுபா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

protest

அப்போது, பெரிய வளர்ச்சித் திட்டங்களை முன்னெடுக்க புதிய கண்ணோட்டத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என அதிகாரிகளிடம் பிரதமர் வலியுறுத்தினார்.

இந்நிலையில், சட்டசபை தேர்தல் நடந்துமுடிந்த மாநிலம் உள்பட பல்வேறு மாநிலங்களில் அறிவிக்கப்பட்டுள்ள இலவச திட்டங்கள் பொருளாதார ரீதியாக நீடிக்க முடியாதவை. இத்திட்டங்கள் மூலம் இலங்கையில் ஏற்பட்டதை போல் பொருளாதார நெருக்கடி நம் நாட்டிலும் ஏற்படக்கூடிய அபாயம் உள்ளது என அதிகாரிகள் கவலை தெரிவித்தனர்.

இதனை பிரதமர் மோடி கேட்டுக்கொண்டதாகவும், அடுத்து நடவடிக்கை எடுக்கப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

newstm.in

Tags:
Next Story
Share it