நிலைமை படுமோசம்.. புதிய உச்சமாக ஒரே நாளில் 2.73 லட்சம் பேருக்கு கொரோனா.. 2.50 கோடியை தாண்டிய மொத்த பாதிப்பு !!
நிலைமை படுமோசம்.. புதிய உச்சமாக ஒரே நாளில் 2.73 லட்சம் பேருக்கு கொரோனா.. 2.50 கோடியை தாண்டிய மொத்த பாதிப்பு !!

நாடு முழுவது கொரோனா வைரஸ் பாதிப்பு மிக வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான், தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா வைரஸ் கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது. இதனால் நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது.
எனினும் நாள்தோறும் நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. அந்த வகையில், இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு புதிய உச்சமாக 2.73 லட்சமாக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்த அறிக்கையை இன்று காலை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டது. இந்த தகவலின்படி இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,50,61,919 உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 2,73,810 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நேற்று ஒரே நாளில் 1,619 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,78,769 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,29,53,821 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 1,44,178 பேர் குணமடைந்துள்ளனர்.

நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 19,29,329 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர். நாடு முழுவதும் நேற்று வரை 12,38,52,566 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
newstm.in

