பாம்பு தெரியும்... அதுதென்ன ரெயின்போ கலர் பாம்பு..? வைரல் வீடியோ!!
பாம்பு தெரியும்... அதுதென்ன ரெயின்போ கலர் பாம்பு..? வைரல் வீடியோ!!

சமூக வலைதளங்களில் விலங்குகள் தொடர்பான வீடியோக்கள் மக்களின் கவனத்தை ஈர்ப்பது இயல்பான ஒன்று. ஆனால் 3 மாதங்களுக்கு முன்பாக போடப்பட்ட ஒரு வீடியோ தற்போது ட்ரெண்டாகி வருவது தான் மிகவும் ஆச்சரியமான ஒன்று.
அமெரிக்காவின் கலிஃபோர்னியா பகுதியில் ஜே ப்ரூ என்பவர் ஒரு ஊர்வன விலங்குகள் உயிரியல் பூங்கா ஒன்றை நிர்வாகித்து வருகிறார். அவர் அவ்வப்போது அங்கு இருக்கும் வித்தியாசமான வகை ஊர்வனைகளை வைத்து வீடியோ எடுத்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.
அந்த வகையில் கடந்த மே மாதம் தன்னுடைய பூங்காவில் உள்ள ஒரு ரெயின்போ நிற பாம்பு தொடர்பாக வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ அப்போது ஒரளவிற்கு நல்ல வியூஸ் மற்றும் லைக்ஸ் பெற்றுள்ளது. எனினும் சமீபத்தில் இந்த வீடியோவின் ஒரு பகுதியை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தின் ரீல்ஸில் வைத்துள்ளார். அதைப் பார்த்த பலரும் அந்த பழைய வீடியோவை சென்று முழுமையாக பார்த்துள்ளனர்.
இதனால் தற்போது அந்த வீடியோவை 20 மில்லியன் பேருக்கு மேல் பார்த்து ரசித்துள்ளனர். அத்துடன் 1 மில்லியன் பேர் லைக் செய்துள்ளனர். அத்துடன் பலரும் ஆச்சரியத்துடன் இந்தப் பதிவில் தங்களது கருத்துகளை பதிவிட்டுள்ளனர். இந்த வீடியோவை பலரும் ரசித்து உள்ளனர்.

