Theme Check

ஏலத்தில் கடைசி வீரராக சேர்க்கப்பட்ட சச்சின் டெண்டுல்கரின் மகன்... காரணம் இது தான் !!

ஏலத்தில் கடைசி வீரராக சேர்க்கப்பட்ட சச்சின் டெண்டுல்கரின் மகன்... காரணம் இது தான் !!

ஏலத்தில் கடைசி வீரராக சேர்க்கப்பட்ட சச்சின் டெண்டுல்கரின் மகன்... காரணம் இது தான் !!
X

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளுக்கான வீரா்களை ஏலம் எடுக்கும் நிகழ்ச்சி நேற்று சென்னையில் நடைபெற்றது. எல்லா வருடங்களையும் போலவே இந்த ஆண்டும் ஆல்ரவுண்டர்களுக்கான மவுசு அதிகமாகவே இருந்தது. இந்த ஏலத்தில் அதிகபட்சமாக கிறிஸ் மோரிஸ் ரூ.16.25 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும், ரூ. 14.25 கோடிக்கு மேக்ஸ்வெல்லும், ரிச்சர்ட்ஸன் ரூ.14 கோடிக்கும் ஏலத்தில் எடுக்ககப்பட்டது.

இந்திய கிரிக்கெட் அணியில் நம்பிக்கை நட்சத்திரமாக இருந்த சச்சின் டெண்டுல்கர் ஐபிஎல் தொடர் அறிமுகமான போது மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி சாதனை படைத்தார். சச்சின் 2008 முதல் 2013 ஆம் ஆண்டு வரை மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், தற்போது சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கரும் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

அர்ஜுன் டெண்டுல்கர் 20 லட்சம் ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார்.கிரிக்கெட் ரசிகர்கள் கொண்டாடி வரும் அதே வேளையில் ஐபிஎல் ஏலத்தில் இவர் பெயர் இடம்பெற்றது பெரிய அளவில் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. முதலில் வீரர்களை பெயரை சொல்லும் போது அர்ஜுன் பெயரை குறிப்பிடவில்லை. லிஸ்ட்டில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக இவர் பெயர் இடம்பெறவில்லை என இறுதியில் விளக்கம் அளிக்கப்பட்டது. இதனையடுத்து இவர் பெயர் மீண்டும் சேர்க்கப்பட்டு ஏலம் விடப்பட்டது. ஏலத்தில் கடைசி வீரராக இவர் சேர்க்கப்பட்டு ஏலம் விடப்பட்டார். அதில் மும்பை அணி இவரை 20லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளது.

Tags:
Next Story
Share it