Theme Check

தாயின் சடலத்தை ஓராண்டாக பதுக்கி 50 ஆயிரம் டாலர் சம்பாதித்த மகன்! நடந்தது என்ன?

தாயின் சடலத்தை ஓராண்டாக பதுக்கி 50 ஆயிரம் டாலர் சம்பாதித்த மகன்! நடந்தது என்ன?

தாயின் சடலத்தை ஓராண்டாக பதுக்கி 50 ஆயிரம் டாலர் சம்பாதித்த மகன்! நடந்தது என்ன?
X

தாயின் சடலத்தை ஓராண்டாக வீட்டிலேயே மறைத்து மகன் ஓய்வூதியம் பெற்று வந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஆஸ்திரியா நாட்டின் மேற்கு டைரோல் பகுதியில் வசித்து வந்த 89 வயதான மூதாட்டி, கடந்த ஆண்டு ஜூன் மாதம் மரணம் அடைந்தார். இதனை அவரது 66 வயதான அவரது மகன் வெளியே கூறவும் இல்லை, தாயின் உடலை நல்லடக்கம் செய்யவும் செய்யவில்லை. மாறாக தனது வீட்டின் பாதாள அறையில் ஓராண்டுக்கு மேலாக தாயின் உடலை ஐஸ்கட்டிகள் மற்றும் பேண்டேஜ்களை வைத்து பாதுகாத்து வந்துள்ளார். மேலும், துர்நாற்றம் வராமலும் பாத்துக்கொண்டார்.

Austrian man mummifies dead mother to keep receiving her benefits

கடந்த ஓராண்டு காலத்தில் தாயின் ஓய்வூதியத் தொகையாக 50 ஆயிரம் டாலருக்கு (சுமார் ரூ. 36 லட்சம்) மேற்பட்ட தொகையை அவர் பெற்றுள்ளார். புதிதாக அந்தப் பகுதியில் வேலையில் சேர்ந்த தபால்காரர், 'ஓய்வூதியம் பெறும் அந்த மூதாட்டியை நேரில் பார்க்க வேண்டும்' என, கூறிய போது, அவரது மகன் மறுத்து விட்டார்.

அவருக்கு உடல்நிலை சரியில்லை என்றும் தன்னிடம் ஓய்வூதியத்தை கொடுங்கள் எனவும் கேட்டுள்ளார். பழைய தபால்காரர் என்னிடம் தான் வழங்குவார் என்றும் கூறியுள்ளார்.
எனினும் பணத்தை வழங்க மறுத்த புதிதாக வந்த தபால்காரர் சார்பில் இது குறித்து புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து மேற்கொண்ட விசாரணையில், அவரது தாய் உயிரிழந்தது தெரியவந்தது.

Austrian man mummifies dead mother to keep receiving her benefits

மேலும் இறந்து போன தாயின் உடலை பாதாள அறையில் வைத்து விட்டு, அவரது ஓய்வூதியத்தை மகன் வாங்கி வந்தது அம்பலமானது. இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

newstm.in

Tags:
Next Story
Share it