இந்திய அளவில் ட்ரெண்டாகும் #StopChinanotfarmers ஹேஷ்டேக்!
இந்திய அளவில் ட்ரெண்டாகும் #StopChinanotfarmers ஹேஷ்டேக்!

அருணாச்சல பிரதேச எல்லையில் சீனா ஒரு கிராமத்தை உருவாகியுள்ளதாக புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
லடாக்கில் 3,488 கி.மீ.தொலைவுக்கு இந்திய, சீனா எல்லைப் பகுதி நீள்கிறது. எல்லைப் பிரச்சினை காரணமாக கடந்த 1962-ம் ஆண்டில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே மிகப்பெரிய போர் நடைபெற்றது. கடந்த 2017 ஜூன் மாதம் கூட சிக்கிம், பூடான், சீன எல்லைப் பகுதிகள் சந்திக்கும் டோக்லாமில் சீன வீரர்கள் அத்துமீற முயன்றனர். அவர்களை இந்திய வீரர்கள் தடுத்து நிறுத்தினர். சுமார் 72 நாட்களுக்குப் பிறகு சீன வீரர்கள் பின்வாங்கினர். அருணாசல பிரதேசத்தின் எல்லையோர பகுதிகளில் அவ்வப்போது ஆக்கிரமிப்பு செய்து அத்துமீறல் போக்கை கடைப்பிடித்து வருகிறது சீனா.

இந்நிலையில், அருணாச்சல பிரதேச எல்லைப் பகுதியில் இருந்து 4.5 கி.மீ. தொலைவில் புதிய கிராமத்தை சீனா உருவாக்கியுள்ளது. 101 வீடுகளை கொண்ட ஒரு புதிய கிராமத்தையே கட்டி முடித்துள்ளது சீனா.இந்நிலையில், #StopChinaNotFarmers என்ற ஹேஷ்டேக் டிவிட்டரில் இந்திய அளவில் ட்ரெண்டாகி வருகிறது.டெல்லியில் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் இந்திய அரசிற்கு எதிராகவும் கருத்துக்கள் வலுத்து வருகிறது குறிப்பிடத்தக்கது.


