Theme Check

முடிவுக்கு வந்தது போராட்டம்.. கூடாரங்களை பிரித்து சொந்த ஊருக்கு திரும்பும் விவசாயிகள் !!

முடிவுக்கு வந்தது போராட்டம்.. கூடாரங்களை பிரித்து சொந்த ஊருக்கு திரும்பும் விவசாயிகள் !!

முடிவுக்கு வந்தது போராட்டம்.. கூடாரங்களை பிரித்து சொந்த ஊருக்கு திரும்பும் விவசாயிகள் !!
X

வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி விவசாயிகள் டெல்லி எல்லையில் ஒராண்டாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மழை, வெயில், பனி, புயல் மற்றும் போலீசாரின் அடக்குமுறைகளை கடந்து இந்த போராட்டம் நீடித்துள்ளது. 700க்கும் அதிகமான விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். ஆனால் விவசாயிகளின் தியாகம் வீண்போகவில்லை.

விவசாயிகளின் போராட்டத்தை தொடர்ந்து வேளாண் சட்டங்களை ரத்து செய்வதாக பிரதமர் மோடி அறிவித்தார். இதனை தொடர்ந்து, நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் மக்களவை, மாநிலங்களவையில் 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்வதற்கான மசோதா நிறைவேற்றப்பட்டது. மேலும், வேளாண் சட்டத்தை ரத்து செய்ய குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்தார். இதனால், வேளாண் சட்டம் ரத்து செய்யப்பட்டது.

parliment

வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்பட்டபோதும் டெல்லி எல்லையில் விவசாயிகள் தங்கள் போராட்டத்தை தொடர்ந்து நடத்தினர். போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளுக்கு இழப்பீடு, அரசுவேலை, வேளாண் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

இதற்கிடையில், போராட்டத்தின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன? என்பது குறித்து விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து ஆலோசித்து வந்தனர். உள்துறை அமைச்சர் அமித் ஷா விவசாயிகள் சங்கங்களுடன் டெலிபோன் மூலம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதனையடுத்து விவசாயிகள் போராட்டத்தை கைவிடுவது குறித்து ஆலோசனை நடத்தினர். இதன் முடிவில் போராட்டத்தை கைவிட விவசாயிகள் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சனிக்கிழமையன்று (டிச.11) டெல்லியின் எல்லையான சிங்கு மற்றும் திக்ரி பகுதிகளில் இருந்து விவசாயிகள் வெளியேறுகிறார்கள் எனவும் கூறப்படுகிறது.

farmers

பஞ்சாப் மாநில விவசாயிகள் டிசம்பர் 13ஆம் தேதி அமிர்தசரஸ் பொற்கோவிலில் சிறப்பு தரிசனம் செய்யவும் முடிவு செய்துள்ளனர். இந்த அறிவிப்பால் ஓராண்டுக்கு மேலாக விவசாயிகள் போராட்டத்திற்கு அமைக்கப்பட்டிருந்த கூடாரங்களை அகற்றி வருகின்றனர்.

newstm.in

Tags:
Next Story
Share it