Theme Check

இந்திய வீரர்களின் போராட்டம் வீண்.. 9ஆவது விக்கெட்டில் சாதித்த நியூசிலாந்து.. டிராவில் முடிந்த கான்பூர் டெஸ்ட் !

இந்திய வீரர்களின் போராட்டம் வீண்.. 9ஆவது விக்கெட்டில் சாதித்த நியூசிலாந்து.. டிராவில் முடிந்த கான்பூர் டெஸ்ட் !

இந்திய வீரர்களின் போராட்டம் வீண்.. 9ஆவது விக்கெட்டில் சாதித்த நியூசிலாந்து.. டிராவில் முடிந்த கான்பூர் டெஸ்ட் !
X

இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கான்பூரில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா முதல் இன்னிங்சில் 345 ரன்கள் குவித்தது. நியூசிலாந்து 296 ரன்கள் சேர்த்தது. பின்னர் 49 ரன்கள் முன்னிலையுடன் 2ஆவது இன்னிங்சை விளையாடிய இந்தியா, 7 விக்கெட் இழப்பிற்கு 234 ரன்கள் எடுத்திருந்தப்போது டிக்ளேர் செய்தது. இதனால் மொத்தம் 283 ரன்கள் இந்தியா முன்னிலைப் பெற்றது.

இதையடுத்து 284 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி 4ஆம் நாள் ஆட்டநேர முடிவில், ஒரு விக்கெட் இழப்பிற்கு 4 ரன்கள் எடுத்திருந்தது. டாம் லாதம் 2 ரன்களுடனும், வில்லியம் சோமர்வில் ரன்கள் ஏதும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர். இன்று கடைசி நாள் ஆட்டத்தின்போது, 279 ரன்கள் தேவை என்ற நிலையில் இருவரும் இன்று களம் இறங்கினர். இந்திய ஆடுகளத்தில் கடைசி நாள் ஆட்டத்தில் 279 ரன்கள் எடுப்பது மிகவும் கடினம். இதனால் இந்தியா எளிதில் வெற்றி பெறும் என கருதப்பட்டது.

ind nz

ஆனால், மதிய உணவு இடைவேளை வரை முதல் செசனில் டாம் லாதம், வில்லியம் சோமர்வில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருவரும் விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டனர். இதனால் இந்திய அணிக்கு நெருக்கடி ஏற்பட்டது. நியூசிலாந்து அணி மதிய உணவு இடைவேளை 35 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 79 ரன்கள் சேர்த்திருந்தது. அதன்பின்னர் ஆட்டம் இந்தியா பக்கம் திரும்பத் தொடங்கியது. சோமர்வில் 36 ரன்களில் ஆட்டமிழந்தார். அரை சதம் கடந்த டாம் லாதம் 52 ரன்களில், வில்லியம்சன் 24 ரன்களில் என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் 155 ரன்களில் 9 விக்கெட்டுகளை இழந்தது. இதனால் இந்தியா வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு பிரகாசமாக இருந்தது. ஆனால், கடைசி விக்கெட் ஜோடியான அஜாஸ் பட்டேல், ரச்சின் ரவீந்திரா இருவரும் நங்கூரம் போல் நிலைத்து நின்றனர்.

9வது விக்கெட் ஆட்டத்தின் 89.2 ஆவது ஓவரில் ஆன நிலையில், இந்த ஜோடி அடுத்ததாக வீசப்பட்ட 8.4 ஓவர்களில் அதாவது 52 பந்துகளிலும் விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டனர்.

ind nz

இதில் ரச்சின் ரவீந்திரா 91 பந்துகளை சந்தித்து 18 ரன்களையும், அஜஸ் படேல் 23 பந்துகளை சந்தித்து வெறும் 2 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். இவர்களது தடுப்பாட்டம்தான் போட்டியை டிரா பெற வைத்தது. அஸ்வின், ஜடேஜா, அக்ஸர் படேல் ஆகிய மூன்று இந்திய ஸ்பின்னர்களும் எவ்வள்வோ முயற்சித்து கடைசி விக்கெட்டை மட்டும் எளிதில் வீழ்த்த முடியவில்லை.

இதனால் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி 9 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் எடுத்தது. எனவே, போட்டி டிராவில் முடிந்தது. இதன்மூலம் நியூசிலாந்து அணியின் சாதனை பயணம் தொடர்கிறது. நியூசிலாந்து அணி கடைசியாக விளையாடிய பத்து டெஸ்ட் போட்டிகளில் (இந்த போட்டியையும் சேர்த்து) ஒன்றில் கூட தோல்வி அடையவில்லை என்பதே இந்த சாதனையாகும்.

newstm.in

Tags:
Next Story
Share it