இன்னும் 3 வருஷமானாலும் போராட்டம் தொடரும்! விவசாயிகள் சங்கம் அறிவிப்பு!
இன்னும் 3 வருஷமானாலும் போராட்டம் தொடரும்! விவசாயிகள் சங்கம் அறிவிப்பு!

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாய திருத்த சட்டங்களை திரும்பப்பெறும் வரும் வரை போராட்டம் தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை நடத்தப்பட்ட போராட்டங்களை பல்வேறு தந்திரங்களை பயன்படுத்தி ஒன்றுமில்லாது செய்தது போல இந்த போராட்டத்தையும் அழித்து விட முடியும் என அரசு தவறாக நினைக்கிறது. அரசு சில சிறிய போராட்டங்களை மட்டுமே எதிர்கொண்டிருக்கிறது. 35 ஆண்டுகளாக நாங்கள் போராட்டத்தை ஒரு பகுதியாகவே கொண்டுள்ளோம். இந்த போராட்டத்தை எந்தவகையிலும் அவர்களால் நசுக்க முடியாது.3 சட்டங்களையும் திரும்பப்பெற வேண்டும் என்ற எங்கள் கோரிக்கை நிறைவேறும்வரை இந்த போராட்டம் தொடரும். மோடியின் ஆட்சி முடிய இன்னும் 3½ ஆண்டுகள் மீதமிருக்கிறது. அதுவரை எங்களால் போராட்டத்தை தொடர முடியும்.

எங்கள் கோரிக்கை நிறைவேறாமலோ அல்லது எதிர்காலத்தில் பார்க்கலாம் என்ற உறுதியின் பேரிலோ, பாதியளவு ஏற்கப்பட்டாலோ, ஒப்பந்தம் போட்டாலோ போராட்டக் களத்தை காலி செய்ய முடியாது. பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு எந்தவித ஆபத்தும் இல்லை எனவும், குறைந்தபட்ச ஆதரவு விலையின் அடிப்படையில்தான் கொள்முதல் செய்யப்படும் எனவும் தெரிவிக்கும் அரசு அதை எழுத்துப்பூர்வமாக அளிக்க ஏன் இதுவரை முன்வரவில்லை. கியாஸ் சிலிண்டர்களுக்கு மானியம் கொடுப்பதாக ஒரு காலத்தில் கூறப்பட்டது. இப்போது அதுவும் போய்விட்டது என விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

