பல்கலைக் கழகத்தில் பேராசிரியர் பாலியல் தொல்லை கொடுத்ததாக மாணவி புகார்
திருச்சி பாரதி தாசன் பல்கலைக் கழகத்தில் ஆராய்ச்சி மாணவியாக ஒருவர் பயின்று வந்தார். இக்கல்லூரியில் உதவி பேராசிரியராக ஜெயச்சந்திரன் என்பவர் பணியாற்றினார். இவர் தன்னுடைய மனைவியுடன் இல்லற வாழ்வில் ஈடுபட முடியவில்லை என்று கூறி , ஆபாச வார்த்தைகளை பேசி பாலியல் அத்து மீறலில் ஈடுபட்டதாக மாணவி தரப்பில் புகார் கூறப்பட்டது.

திருச்சி பாரதி தாசன் பல்கலைக் கழகத்தில் ஆராய்ச்சி மாணவியாக ஒருவர் பயின்று வந்தார். இக்கல்லூரியில் உதவி பேராசிரியராக ஜெயச்சந்திரன் என்பவர் பணியாற்றினார். இவர் தன்னுடைய மனைவியுடன் இல்லற வாழ்வில் ஈடுபட முடியவில்லை என்று கூறி , ஆபாச வார்த்தைகளை பேசி பாலியல் அத்து மீறலில் ஈடுபட்டதாக மாணவி தரப்பில் கடந்த 25 ம் தேதி பல்கலைக் கழக நிர்வாகத்திடம் புகார் கூறப்பட்டது.
பேராசிரியர் ஜெயச்சந்திரனின் மனைவி அனுஷ்யா தேவியும் அதே பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வருகிறார் என்பதால் , மற்ற ஆசிரியர்கள் தன்னை ஆய்வு மாணவியாக சேர்த்து கொள்ள தயக்கம் காட்டுவதாக மாணவி புகார் தெரிவித்துள்ளார். தனக்கு சரியான கல்வி கிடைக்க வேண்டுமென மாணவி காவல் துறை கண்கானிப்பாளர் மற்றும் மாவட் ஆட்சியர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார். மாணவி புகார் கொடுத்ததால் பேராசிரியர் ஜெயச்சந்திரன் தலைமறைவாகியுள்ளார்.
newstm.in


