படித்தது மறந்து போனதால் மாணவி எடுத்த விபரீத முடிவு!!
படித்தது மறந்து போனதால் மாணவி எடுத்த விபரீத முடிவு!!

ஞாபக மறதி காரணமாக பள்ளி மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் பகுதியை சேர்ந்த ரவி என்பவரின் மகள் தனியார் பள்ளி ஒன்றில் 11ஆம் வகுப்பு படித்து வந்தார். மாணவி வீட்டில் இருக்கும் போது மாத்திரை ஒன்றைச் சாப்பிட்டுள்ளார். அதைப் பார்த்த அவரின் பெற்றோர் மாணவியிடம் என்னவென்று கேட்டுள்ளனர்.
அதற்கு மாணவி தன்னால் சரியாகப் படிக்க முடியவில்லை. ஞாபகமறதி அதிகம் இருக்கிறது, வாழ பிடிக்கவில்லை' என கூறிக்கொண்டே வீட்டில் இருந்த மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.

பின்னர் அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காகக் கோபி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதையடுத்து மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
அங்கு சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
newstm.in

