Theme Check

இளம்பெண் திடீர் முடிவு... பக்கத்து தெரு இளைஞர் எடுத்த விபரீத முடிவு

இளம்பெண் திடீர் முடிவு... பக்கத்து தெரு இளைஞர் எடுத்த விபரீத முடிவு

இளம்பெண் திடீர் முடிவு... பக்கத்து தெரு இளைஞர் எடுத்த விபரீத முடிவு
X

சென்னையை அடுத்த புழலில் புத்தகரம் பகுதியைச் சேர்ந்தவர் இளைஞர் சதீஷ்குமார் (20). இவர் கோயம்பேடு அருகே உள்ள தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயின்று வந்தார். சதீஷ்குமார், அதே பகுதியில் உள்ள ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். இருவரும் காதலித்து வந்த நிலையில், பல்வேறு இடங்களுக்கு சுற்றி காதலை வளர்த்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், அப்பெண் திடீரென காதலை கைவிடும் படி கூறியதாக கூறப்படுகிறது. இதனால் இளைஞர் சதீஷ்குமார் மனமுடைந்து பெற்றோர்களிடம் பேசாமல் மனவிரக்தியில் இருந்து வந்தார். வழக்கம் போல் வெளியே சென்றுவிட்டு வீட்டுக்கு வந்த சதீஷ்குமார், நேற்று மாலை தனது அறையில் தூங்க செல்வதாக கூறிச்சென்றார். வெகுநேரமாகியும் வெளியே வராமல் இருந்ததால் சந்தேகமடைந்த சகோதரர் சந்தோஷ் கதவை தட்டி திறக்கப்படாததால் கதவை உடைத்து உள்ளே சென்றபோது ஃபேன் மாட்டும் ஊக்கில் நைலான் கயிறால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

youth

இதனால் அக்குடும்பத்தினர் பெரும் சோகத்தில் மூழ்கினர். அவரது பெற்றோர் கதறிஅழுத நிகழ்வு காண்போரை கலங்கச்செய்தது. இது பற்றி புழல் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து புழல் போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இளம்பெண் காதலை கைவிட்டதால் தான் இளைஞர் சதீஷ்குமார் தற்கொலை செய்துக்கொண்டதாக உறவினர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

newstm.in

Next Story
Share it